இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் மொயின் அலி 47 ரன்களும், வில்லே 41 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் சாஹல் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன்காரணமாக இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 


 


247 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். அவருக்கு அடுத்து வந்த ரிஷப் பண்ட் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 


 






இதனால் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்து தடுமாறியது. பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் 27 ரன்களுக்கும் ஹர்திக் பாண்ட்யா 29 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 101 ரன்களுக்கு இந்திய அணி 6 விக்கெட் இழந்தது. அடுத்து பந்துவீச்சாளர் முகமது ஷமி மட்டும் ஒரளவு தாக்குப்பிடித்து 23 ரன்கள் எடுத்தார். 


 


இந்திய அணி 38.5 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரீஸ் டாப்லி 24 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அத்துடன் ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளதால் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் மூன்றாவது ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண