இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்டில் இந்திய அணியின் கை தற்போது ஓங்கி உள்ளது. கென்னிங்டன் ஓவலில் நடைபெறும் இந்த டெஸ்டின் மூன்றாம் நாள் தேனீர்இடைவேளை வரை இந்தியா 6 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்து இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.யஷஸ்வி ஜெய்ஸ்வால் 118 ரன்கள் அடித்து அசத்தினார். இந்திய அணி 281 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது
5வது டெஸ்ட்:
கென்னிங்டன் ஓவலில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்டில், முதல் இன்னிங்ஸ்சில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்திய அணியில் அதிகப்பட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் எடுத்தார், இதன் பிறகு, இங்கிலாந்து டி20 பாணியில் பேட்டிங் செய்தது. பென் டக்கெட் 38 பந்துகளில் 43 ரன்களும், ஜாக் க்ரோலி 57 பந்துகளில் 64 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை அளித்தனர், ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள் வலுவான கம்பேக் கொடுத்து இங்கிலாந்தை 247 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். இதன் மூலம், இங்கிலாந்து 23 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் இந்தியா விரைவில் கே.எல். ராகுல் 07 மற்றும் சாய் சுதர்சன் 11 ரன்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஆகாஷ் தீப், ஜடேஜா, ஜூரேல் ஆகியோரின் கச்சிதமான ஆட்டத்தால் இந்திய அணி 281 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
எவ்வளவு இலக்கு வைக்க வேண்டும்:
இப்போது மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்தியா எத்தனை ரன்கள் எடுக்க வேண்டும் என்பது தான். அது தான் இங்கிலாந்தின் தோல்வியை உறுதி செய்யும். இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய அணி இங்கிலாந்துக்கு முன்னால் 350 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்தால், இந்தியா வெற்றி பெறுவது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். இதற்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய காரணம் மேகமூட்டமான சூழ்நிலை மற்றும் ஓவலின் ஆடுகளம். இங்கு வானத்தில் கருமேகங்கள் இருக்கும். லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி கிடைக்கும் என்பது போன்ற காரணங்கள் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும்
அதிகப்பட்ச சேசிங் எவ்வளவு?
இங்கு வெற்றிகரமான ரன் சேசிங் சுமார் 123 ஆண்டுகளுக்கு முன்பு 1902 ஆம் ஆண்டு நடந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 263 ரன்கள் இலக்கை துரத்தியது. இதன் பிறகு, 1963 ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 253 ரன்கள் துரத்தியது. அதே நேரத்தில், ஆஸ்திரேலிய அணியும் இந்த மைதானத்தில் 85 ரன்கள் இலக்கை டிஃபெண்ட் செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 1882 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்த சாதனையைச் செய்தது. இங்கிலாந்து அணி அப்போட்டியில் வெறும் 77 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.