இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. 


 


இதில் சிறப்பாக விளையாடி வந்த புஜாரா 66 ரன்களில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் அரைசதம் கடந்து அசத்தினார். இவர் 57 ரன்கள் எடுத்திருந்த போது ஜேக் லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா மட்டும் ஒரளவு தாக்குபிடித்தார். ஜடேஜா 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 


 






பின்னர் வந்த வீரர்களில் ஷமி மட்டும் 13 ரன்கள் எடுத்தார். ஷர்துல் தாகூர் 4 ரன்களிலும், பும்ரா 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 378 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 


இங்கிலாந்து அணி நான்காவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 359 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது. ஆகவே இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அது மிகப்பெரிய சாதனை வெற்றியாக அமையும். மேலும் இந்திய அணிக்கு எதிராக அதிகபட்சமாக நான்காவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 1977ஆம் ஆண்டு 337 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது. ஆகவே இந்திய அணிக்கு எதிராக எந்த ஒரு அணியும் 350 ரன்களுக்கு மேல் நான்காவது இன்னிங்ஸில் சேஸ் செய்து வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண