கடந்தாண்டு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்காக ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மேலும், மறு அட்டவணைப்படுத்தப்பட்ட இந்த டெஸ்ட் போட்டி வரும் 1-ந் தேதி எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற உள்ளது.


இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய கேப்டன் ரோகித்சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், உடனே அவர் ஹோட்டலில் உள்ள அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்திய கேப்டன் ரோகித்சர்மாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.




அவருக்கு பதிலாக மாற்று வீரராக மயங்க் அகர்வால் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டார். இந்த நிலையில், ரோகித்சர்மா வரும் 1-ந் தேதி தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ரோகித்சர்மா ஆடாவிட்டால் அணியை கோலி வழிநடத்துவாரா? என்று கேள்வி எழுந்தது.


இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித்சர்மாவிற்கு பதிலாக துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா செயல்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ரோகித்சர்மா அந்த டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.




இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே காயத்தால் கே.எல்.ராகுல் விலகினார். தற்போது. ரோகித்சர்மாவும் டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணிக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஏற்கனவே லீசெஸ்டர்ஷையர் அணியுடன் பயிற்சி போட்டியில் மோதிய இந்திய அணி, இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டி மட்டுமின்றி 3 டி20 போட்டிகளிலும், 3 ஒருநாள் போட்டிகளிலும் ஆட உள்ளது. முன்னதாக, இந்திய அணிக்கு விராட்கோலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இல்லாவிட்டால், தென்னாப்பிரிக்க தொடரில் கேப்டனாக பொறுப்பு வகித்த ரிஷப்பண்ட் கேப்டனாக பொறுப்பு வகிப்பாரா? என்றும் எதிர்பார்ப்பு எழுந்தது. 


பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டால் கபில்தேவிற்கு பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பு ஏற்கும் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார்.


மேலும் படிக்க : Watch Video: வாவ்..! இலங்கை கேப்டனை அலறவிட்டு அவுட்டாக்கிய வார்னர்..! வைரலாகும் வீடியோ..!


மேலும் படிக்க : Babar Azam in T20: விராட்கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்..! அப்படி என்ன சாதனை..?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண