IND vs ENG 3rd ODI LIVE : ரிஷப்பண்ட் சதத்தால் தொடரை வென்றது இந்தியா...!
IND vs ENG 3rd ODI LIVE : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
டேவிட் வில்லி வீசிய 42வது ஓவரில் 5 பவுண்டரிகளை ரிஷப்பண்ட் விளாசி அசத்தினார்.
இந்திய வெற்றிக்காக பொறுப்புடன் ஆடிய ரிஷப்பண்ட் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார்.
இந்தியாவின் வெற்றிக்கு 60 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்படுகிறது. ரிஷப்பண்ட் 96 ரன்களுடனும், ஜடேஜா 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணிக்காக அபாரமாக ஆடி 71 ரன்கள் விளாசிய ஹர்திக் பாண்ட்யா ப்ரைடன் பந்தில் ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிஷப்பண்ட் ஜோடி அபாரமாக ஆடி பார்ட்னர்ஷிப் 100 ரன்களை குவித்துள்ளனர்.
இந்திய அணிக்காக ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிஷப்பண்ட் இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடி அரைசதம் விளாசியுள்ளனர். இதனால், இந்தியாவின் வெற்றிக்கு 110 பந்துகளில் 96 ரன்கள் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் சூழலில், ஹர்திக் பாண்ட்யாவும், ரிஷப்பண்டும் நிதானமாக ஆடி வருகின்றனர்.
இந்திய அணி 72 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஹர்திக்பாண்ட்யா மற்றும் ரிஷப்பண்ட் ஜோடி களத்தில் உள்ளனர்.
260 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் இந்திய அணி 38 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
260 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர்தவான் 1 ரன்னில் டோப்ளே பந்தில் அவுட்டானார்.
260 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர்தவான் 1 ரன்னில் டோப்ளே பந்தில் அவுட்டானார்.
இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 45.5 ஓவர்களில் 259 ரன்களை எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணி 43.4 ஓவர்களில் 247 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. இன்னும் 6 ஓவர்கள் மீதமிருப்பதால் இங்கிலாந்து அணி அதிரடி காட்டுமா? எனறு எதிர்பாரக்கப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்காக பொறுப்புடன் ஆடி வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகிய இருவரையும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஒரே ஓவரில் அவுட்டாக்கினார். பட்லர் 60 ரன்களில் வெளியேறினார்.
இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் அபாரமாக ஆடி அரைசதம் அடித்து விளாசினார்.
இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த மொயின் அலி 34 ரன்களில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், இங்கிலாந்து அணி 149 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.
இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் 29 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்திக் பாண்ட்யா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 41 ரன்களில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் அவுட்டானார்.
இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணியின் ஜானி பார்ஸ்டோ, ேோ ரூட்டை முகமது சிராஜ் டக் அவுட்டாக்கி வெளியேற்றினார்.
Background
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் இந்தத் தொடரின் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்தப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 8 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்தில் தொடரை வென்றுவிடும். ஆகவே இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
இந்தியாவின் பிரச்சினைகள்:
எனினும் இந்திய அணிக்கு இந்தத் தொடரில் பந்துவீச்சை விட பேட்டிங் தான் மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக இந்திய அணியின் நடுகள வீரர்கள் சரியாக விளையாடுவதில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் மற்றும் தவான் ஒரு சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடி வருகின்றனர். அத்துடன் இந்திய அணியின் டெயில் எண்டர்கள் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகின்றனர். ஆகவே இந்திய அணியின் பந்துவீச்சு அளவிற்கு பேட்டிங் இந்தத் தொடரில் எடுபடவில்லை.
விராட் கோலியின் ஃபார்ம்:
இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி தற்போது மோசமான ஃபார்மில் உள்ளார். அவர் முதல் ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. அடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி 16 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்தச் சூழலில் அவருக்கு அடுத்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முற்றிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதற்கு முன்பாக இந்த இன்னிங்ஸில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
கடைசியாக இவர் கடைசியாக 2019ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். அதன்பின்னர் விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டியில் கூட சதம் அடிக்கவில்லை.
அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை அதிலும் விராட் கோலி சமீபத்தில் சதம் அடிக்கவில்லை. கடைசியாக 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். அந்தப் போட்டியில் விராட் கோலி 114* ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் சதம் அடிக்கவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -