IND vs ENG, ODI Live: 17 ஓவர்களில் 111 ரன்கள் ..! வெற்றி பெறுமா இந்தியா..?

IND vs ENG, 2nd ODI, Lord's Stadium: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

ABP NADU Last Updated: 15 Jul 2022 12:16 AM
17 ஓவர்களில் 111 ரன்கள் ..! வெற்றி பெறுமா இந்தியா..?

இந்தியாவின் வெற்றிக்கு 17 ஓவர்களில் 111 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் ஜடேஜா மற்றும் ஷமி உள்ளனர். 

87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள்..! காப்பாற்றுவார்களா ஜடேஜா - பாண்ட்யா ஜோடி..?

இந்திய அணி 87 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஜடேஜாவும், ஹர்திக்பாண்டயாவும் களத்தில் உள்ளனர். 

இந்தியாவை காப்பாற்றுவர்களா ஹர்திக் - சூர்யகுமார் யாதவ்..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

இந்திய அணியின் முன்னணி விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்துவிட்டதால் இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா - சூர்யகுமார் யாதவ் ஜோடி காப்பாற்றுவார்களா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். 

29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்..! ரிஷப்பண்ட் டக் அவுட்..!

இந்திய அணியின் அதிரடி வீரர் ரிஷப்பண்ட் ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால், இந்திய அணி 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

ஷிகர்தவான் 9 ரன்னில் அவுட்..! 27 ரன்களுக்கு 2 விக்கெட்..!

இந்தியாவின் ரோகித்சர்மா 0 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஷிகர்தவான் 9 ரன்களில் அவுட்டானார். இதனால், இந்திய அணி 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

ரோகித் சர்மா டக் அவுட்..! இந்தியாவிற்கு அதிர்ச்சி தொடக்கம்..!

இந்திய கேப்டன் ரோகித்சர்மா டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இந்திய அணி 5 ரன்களுடன் களத்தில் ஆடி வருகிறது. 

இந்திய அணிக்கு 247 ரன்கள் இலக்கு...!

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்திய அணிக்கு 247 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கடைசி 5 ஓவரில் அதிரடி காட்டுமா இங்கிலாந்து..?

மொயின் அலி மற்றும் டேவிட் வில்லி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 45 ஓவர்களில் 225 ரன்களை எட்டியுள்ளது. இதனால், கடைசி 5 ஓவர்களில் அந்த அணி அதிரடி காட்டுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்து அணிக்காக போராடும் மொயின் அலி..!

இங்கிலாந்து அணிக்காக ஆல் ரவுண்டர் மொயின் அலி டேவிட் வில்லியுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி வருகிறார். 

லிவிங்ஸ்டனை காலி செய்த ஹர்திக்...!

இங்கிலாந்து அணிக்காக அதிரடி காட்டிய இங்கிலாந்து பேட்ஸ்மேன் லியாம் லிவிங்ஸ்டன் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் அவுட்டானார். 

ஷமி வேகத்தில் ஸ்டம்பை பறிகொடுத்த பென்ஸ்டோக்ஸ்..!

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரும், அதிரடி பேட்ஸ்மேனுமாகிய பென்ஸ்டோக்ஸ் ஷமி பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால், இங்கிலாந்து அணி 103 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. 

100 ரன்களை எட்டிய இங்கிலாந்து..!

20.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து 100 ரன்களை எட்டியுள்ளது. 

இங்கிலாந்து 84 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்..!

சஹாலின் சுழலில் ரூட்டும், முகமது ஷமியின் வேகத்தில் பட்லரும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்..!

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாற்றம்..!

ரூட் மற்றும் பட்லர் அடுத்தடுத்து அவுட்டாகியதால், இங்கிலாந்து 84 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றாம்..!

பார்ஸ்டோவை காலி செய்த சாஹல்...!

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பார்ஸ்டோ 38 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாஹல் சுழலில் ஸ்டம்பை பறிகொடுத்து ஆட்டமிழந்தார். 

முதல் விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து..!

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரும், தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவருமான ஜேசன் ராய் 23 ரன்களில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் அவுட்டானார். 

நிதானமாக ஆடும் இங்கிலாந்து..!

கடந்த போட்டியில் மோசமாக ஆடி விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி மிகவும் நிதானமாக ஆடி வருகிறது. அந்த அணி சற்று முன்வரை விக்கெட் இழப்பின்றி 40 ரன்களை எடுத்துள்ளது. 

காயத்தில் இருந்து மீண்ட கோலி..! இங்கிலாந்தை செய்வாரா காலி..?

இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த போட்டியில் காயம் காரணமாக களமிறங்காத விராட்கோலி, காயத்தில் இருந்து மீண்ட காரணத்தால் இந்த போட்டியில் களமிறங்குகிறார். 

டாஸ் வென்ற இந்தியா..! இந்தியாவின் பந்துவீச்சை தாங்குமா இங்கிலாந்து..?

இங்கிலாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச உள்ளது. இதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 

Background

இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இந்திய அணி 110 ரன்களுக்கு சுருட்டியது. பும்ரா சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதன்பின்னர் ஆடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


இந்நிலையில் இன்று இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் காயம் காரணமாக விலகிய விராட் கோலி இன்றைய போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. முதல் போட்டியில் வெற்றி அடைந்த இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 


லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா:


புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டை ஆகி உள்ளது. ஆகவே இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. 


இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மாவின் ஃபார்ம் சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது. அவருடன் ஷிகர் தவானும் இன்றைய போட்டியில் கைக் கொடுக்கும் பட்சத்தில் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 


பிரச்னையில் இங்கிலாந்து:


இங்கிலாந்து அணி ஏற்கெனவே சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்துள்ளது. இந்தச் சூழலில் இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் ஒருநாள் தொடரையும் இங்கிலாந்து அணி இழக்க நேரீடும். ஆகவே இங்கிலாந்து அணி கடும் நெருக்கடியில் உள்ளது. இங்கிலாந்து அணியின் அனுபவ வீரர்கள் ரூட், ஸ்டோக்ஸ், பட்லர், பேர்ஸ்டோவ் ஆகியோர் பொறுப்புடன் ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.