இந்தியா - இங்கிலாந்து 2 -வது டெஸ்ட்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 112 ஓவர்களில் 396 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து ஒற்றை ஆளாக போராடி இந்திய அணிக்காக சிறப்பான இன்னிங்ஸ் ஆடினார்.
அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 253 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாக் கிராவ்லி 78 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் விளாசி அரைசதம் கடந்தார். சிறப்பாக விளையாடி வந்த இவர் அக்ஷர் பட்டேல் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். சாக் கிராவ்லியைத் தவிர்த்து மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ் மேன்கள் தொடங்கி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரை அனைவரும் ஓரளவுக்கு தாக்குபிடித்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தினை வெளிப்படுத்த முடியவில்லை.
கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டும் சிறப்பாக விளையாடி 54 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்ஸரும் விளாசி 47 ரன்கள் சேர்த்த நிலையில் பும்ரா பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இறுதியில் இங்கிலாந்து அணி 55.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டும் சேர்த்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். அதன்படி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் படி இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்தது.
மூன்றாவது நாள் ஆட்டம்:
இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று காலை (பிப்ரவரி 4) தொடங்கியது. இதில் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதனைத்தொடர்ந்து மறுபுறம் களத்தில் நின்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டையும் 41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் தான் கைப்பற்றினார். இவ்வாறாக ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறிவருகிறது. தற்போது களத்தில் 37 ரன்களுடன் சுப்மன் கில்லும் 24 ரன்களுடன் ஸ்ரேயாஸ் 24 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். அதன்படி, 87 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது இந்திய அணி.
மேலும் படிக்க: Watch Video: ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் 5-வது முறையாக அவுட் ஆன சுப்மன் கில்! சச்சினை ஒப்பிட்டு கிண்டல் செய்யும் ரசிகர்கள்!
மேலும் படிக்க: India vs England 2nd Test: சொதப்பிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்...மோசமான ரெக்கார்டை செய்த இந்திய அணி!