IND vs ENG 1st ODI: இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையில் இன்று முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற இருந்த டெஸ்ட் மற்றும் டி20, ஒருநாள் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த போட்டிகள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து டெஸ்ட் போட்டி கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தியவர் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இந்த போட்டியில், இந்திய அணி தோற்று விட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இன்று மாலை இந்திய நேரப்படி 5.30க்கு தொடங்கும் முதல் ஒருநாள் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்திய அணியின், முன்னாள் கேப்டன் மற்றும் ரன் மிஷின் என அழைக்கப்படும் விராட் கோலியின், ரசிகர்கள் சமூக வலைதளமான டிவிட்ட்டரில், #KingKohli மற்றும் #ViratKohli என்ற கேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடக்கும் இந்த ஒருநாள் போட்டித் தொடரில் விராட் கோலி நாலாபுறமும் பந்துகளை சிதறடித்து ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கின்றனர். மூன்றாவது வீரராக களமிறங்கவுள்ள விராட் கோலி அதிக ரன்களை அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. டி-20 போட்டியில் தொடர்ந்து சரியாக விளையாடாத விராட் கோலி, தன்னை மீண்டும் ஃபார்முக்கு கொண்டு செல்ல இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'Form is temporary, class is permanent';
மேலும், டிவிட்டரில் விராட் கோலி பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறிய, 'Form is temporary, class is permanent' என்ற வாசகத்தையும் சேர்த்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா, “வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு எதுவும் தெரியாது. எனவே அதை நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஒரு தொடரில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக அவர் நல்ல வீரர் இல்லை என முடிவு செய்துவிட முடியாது” என பதிலடி கொடுத்திருந்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்