IND vs ENG 1st ODI LIVE: வெற்றியின் விளிம்பில் இந்தியா..! ரோகித் - தவான் அபாரம்..!
IND vs ENG 1st ODI LIVE UPDATES: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
இங்கிலாந்து அணி நிர்ணயித்த 111 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி அபாரமாக ஆடி வருகிறது. ரோகித்சர்மா - ஷிகர்தவான் ஜோடி இலக்கை நோக்கி சிறப்பாக ஆடி வருகிறது.
இங்கிலாந்து அணி நிர்ணயித்த 111 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி அபாரமாக ஆடி வருகிறது. ரோகித்சர்மா - ஷிகர்தவான் ஜோடி இலக்கை நோக்கி சிறப்பாக ஆடி வருகிறது.
இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ள 111 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணியின் ரோகித்சர்மாவும், ஷிகர்தவானும் களமிறங்கி ஆடி வருகின்றனர்.
இந்திய அணிக்கு எதிராக பேட்டிங் செய்த இங்கிலாந்து 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. பும்ரா அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷமி 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
டெயிலண்டர்களின் ஆட்டத்தால் இங்கிலாந்து அணி போராடி 100 ரன்களை கடந்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீசி வருவதால் அந்த அணி சற்றுமுன் வரை 17 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.
இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவின் வேகத்தில் ஜேசன் ராய் மற்றும் ஜோ ரூட் அடுத்தடுத்து ஆட்டமிழந்துள்ளனர். இங்கிலாந்து அணி 6 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கான ஆட்டத்தை ஜேசன்ராயும், ஜானி பார்ஸ்டோவும் தொடங்கியுள்ளனர்.
Background
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் காயம் காரணமாக விராட்கோலி இடம்பெறவில்லை.
இந்திய அணிக்கு ஷிகர் தவான், முகமது ஷமி ஆகியோர் திரும்பியுள்ளனர். ஆகவே இந்திய அணி கூடுதல் பலமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பந்துவீச்சில் பும்ரா,ஷமி வருவது கூடுதல் வலு சேர்க்கும் வகையில் இருக்கும். அவர்கள் தவிர சுழற்பந்துவீச்சாளராக சாஹல் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் ரெக்கார்டு:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இதுவரை 103 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில் 43 போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 55 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகளில் டையில் முடிவடைந்துள்ளன.
ஓவல் மைதானத்தில் இந்தியா:
லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணி 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. அவற்றில் 5 போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 2 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மண்ணில் இந்தியாவின் ஒருநாள் ரெக்கார்டு:
இங்கிலாந்து நாட்டில் இந்திய அணி தற்போது வரை 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில் இங்கிலாந்து அணி 22 போட்டிகளிலும், இந்தியா 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிவடைந்துள்ளது.
2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக இந்திய அணிக்கு சரியான வீரர்களை தேர்வு செய்ய ஒவ்வொரு ஒருநாள் தொடரும் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -