IND Vs Ban 2nd Test: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் வென்று, தொடரை கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது.


இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் தொடர்:


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளயாடுகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 280 ரன்கள் வித்தியாசத்தில் நடைபெற்றது. இதன் மூலம் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரண்டு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்ட்,இ, கான்பூரில் தொடங்குகிறது.


2வது டெஸ்டில் வெற்றி யாருக்கு?


இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு கான்பூர் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் வென்று தொடரை கைப்பற்ற இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய வங்கதேச அணியும் முனைப்பு காட்டுகிறது.  இதனால், இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. போட்டியின் நேரலையை ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும் மற்றும் ஜியோ சினிமா செயலியிலும் கண்டுகளிக்கலாம்.


இந்திய அணி நிலவரம்:


சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில், சுப்மன் கில், ரிஷப் பண்ட் மற்றும் ஜெய்ஷ்வால் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தமிழக வீரர் அஷ்வின் சதமடித்ததோடு, 6 விக்கெட்டுகளையும் குவித்து வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகன் விருது பெற்றார். பந்துவீச்சில் பும்ரா, ஆகாஷ் தீப் ஆகியோர் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தினர். அதேநேரம், அணியின் நட்சத்திர வீரர்களான கோலி, கேப்டன் ரோகித் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் முதல் போட்டியில் ரன்களை சேர்க்க தவற்னர். இரண்டாவது போட்டியில் அவர்கள் ஜொலிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


வங்கதேச அணி நிலவரம்:


அண்மையில் பகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெற்ற வெற்றியின் உற்சாகத்துடன் களமிறங்கிய, வங்கதேச அணிக்கு இந்தியா கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் வங்கதேச அணியை மிரட்டி வருகின்றனர். 


மைதான அறிக்கை:


கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானதாக அறியப்படுகிறது.நேரம் செல்ல செல்ல சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தலாம்.  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5 போட்டிகளில் இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோர் 365 ரன்கள்.


டெஸ்ட் வரலாறு:


இரு அணிகளும் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 12 போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை, 2 போட்டிகள் டிராவில் முடிந்தன.


உத்தேச பிளேயிங் லெவன்:


இந்தியா: ரோகித் சர்மா , யஷஸ்வி ஜெய்ஸ்வால் , ஷுப்மான் கில் , விராட் கோலி , ரிஷப் பண்ட் (வி.கே.) , கே.எல். ராகுல் , ஆர்.ஏ. ஜடேஜா , ரவிச்சந்திரன் அஷ்வின் , ஜே.ஜே. பும்ரா , முகமது சிராஜ் , ஆகாஷ் தீப்


வங்கதேசம்: ஷத்மான் இஸ்லாம் , ஜாகிர் ஹசன் , நஸ்முல் ஹொசைன் சாண்டோ (சி) , மொமினுல் ஹக் , முஷ்பிகுர் ரஹீம் , ஷகிப் அல் ஹசன் , லிட்டன் தாஸ் (வாரம்) , மெஹிதி ஹசன் மிராஸ் , தஸ்கின் அகமது , ஹசன் மஹ்மூத் , நஹித் ராணா