வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 19 ரன்கள் எடுத்து 208 ரன்கள் பின்தங்கியுள்ளது. 


போட்டி சுருக்கம்: 


இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டாக்காவில் உள்ள ஷேர் ஏ பங்களா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 19 ரன்கள் எடுத்து 208 ரன்கள் பின்தங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் 3 ரன்களுடனும், சுப்மன் கில் 14 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். 


வங்கதேச அணியின் முதல் இன்னிங்ஸ்:


டாக்கா டெஸ்டில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. இதன் போது ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ ஆகியோர் அணிக்கு ஓப்பன் செய்ய வந்தனர். ஜாகிர் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷாண்டோ 24 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். கேப்டன் ஷகிப் அல் ஹசன் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய முஷ்பிகுர் ரஹீம் 26 ரன்கள் எடுத்து வெளியேற,  மொமினுல் ஹக் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 157 பந்துகளை எதிர்கொண்டு 84 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸில் 12 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். லிட்டன் தாஸ் 26 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய மெஹ்தி ஹசன் 51 பந்துகளில் 15 ரன்களுடனும், நூருல் ஹசன் 6 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினர். உள்ளே வந்த தஸ்கின் அகமது வந்த வேகத்தில் 1 ரன் எடுத்த நிலையில் வெளியேற, வங்கதேச அணி 73.5 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்தது. 


வங்கதேச அணிக்காக மொமினுல் ஹக் 84 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடித்திருந்தார். உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள ஜெய்தேவ் உனத்கட் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.


இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ்:


டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் 3 ரன்களுடனும், சுப்மன் கில் 14 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். 


இந்திய அணி-  கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெய்தேவ் உனத்கட், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்


வங்கதேச அணி -  நஜ்முல் ஹுசைன் சாண்டோ, ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), நுருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), மெஹ்தி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், கலீத் அகமது, தஸ்கின் அகமது