வழக்கம்போல் கேட்ச் செய்தபிறகு தவான், தனது கால் தொடையினை உயர்த்தி கையால் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இந்தியா வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், முதலில் களம் இறங்கிய வங்கதேச அணி பேட்டிங்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க வீரர்களான அனாமுல் ஹக் மற்றும் லிட்டன் தாஸ் வந்த வேகத்தில் வெளியேற, அடுத்து வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 35 பந்துகளில் 21 ரன்கள் அடித்து வெளியேறினார். 


வங்கதேச அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஷகில் அல் ஹாசன் 20 பந்துகளில் 8 ரன்களை எடுத்திருந்தபோது, வாஷிங்டன் சுந்தர் வீசிய 17 வது ஓவரை எதிர்கொண்டார். அப்போது அடிக்க முயற்சித்த ஷகிக் அல் ஹாசன் பந்தை மேலே உயர்த்தினார். கேட்சை பிடிக்க தயாராக இருந்த தவான், கைகளில் கேட்சை தவறவிட்டார். அந்த நேரத்தில் இதை பார்த்த வாஷிங்டன் சுந்தர் பதட்டத்தில் மைதானத்தில் படுத்துவிட, மீண்டும் பிடிக்க முயற்சி செய்த தவான் கீழே சென்ற பந்தை தனது கால் தொடைகளால் இறுக்கி பிடித்தார்.






வழக்கம்போல் கேட்ச் செய்தபிறகு தவான், தனது கால் தொடையினை உயர்த்தி கையால் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 






காயத்தால் வெளியேறிய ரோகித் :


போட்டியின் 2வது ஓவரை வீசிய முகமது சிராஜின் பந்தை எதிர் கொண்ட அனுமல் அடித்த பந்து, செகண்ட் ஸ்லிப்பில் நின்று கொண்டு இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவிடம் சென்றது. பந்தை பிடிக்க முயன்ற ரோகித்துக்கு காயம் ஏற்படவே, மைதானத்தில் இருந்து வெளியேறினார். காயத்தின் தன்மை அதிகமாக இருக்கவே அவர் தற்போது மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இவருக்கு பதிலாக மாற்று வீரராக ராஜத் படிதார் களமிறங்கியுள்ளார். 


தற்போது அணியை துணைக் கேப்டன் கே.எல். ராகுல் வழிநடத்தி வருகிறார். தற்போது வங்கதேச அணி 46 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 60 ரன்களுக்குள் 6 விக்கெட்களை இழந்த வங்கதேசம் அணி, மெஹிதி ஹசன் -மஹ்முதுல்லாஹ் ஜோடி தலா அரைசதம் அடித்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி சரிவில் இருந்து மீட்டனர். 


இந்தியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 96 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த மஹ்முதுல்லாஹ், உம்ரான் மாலிக் வீசிய 47 வது ஓவரில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.