IND vs BAN 2nd ODI Score Live: தொடரை வென்றது வங்கதேசம்.. கடைசி பந்தில் 6 ரன் எடுக்க முடியாமல் இந்தியா தோல்வி

IND vs BAN 2nd ODI Score Live: இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 07 Dec 2022 07:57 PM
ரோகித்தின் அரை சதம் வீண்

கேப்டன் ரோகித் சர்மா காயத்துடன் களமிறங்கி கடைசி கட்டத்தில் விளையாடினார். 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தும் கடைசி ஒரு பாலில் 6 ரன் தேவைப்பட்ட நிலையில், அடிக்க முடியாமல் போனது.

நம்பிக்கை வீரராக ரோகித்

கேப்டன் ரோகித் சர்மா இறுதி கட்டத்தில் இறங்கி விளையாடி வருகிறார். இந்தியா வெற்றி பெறும் முனைப்புடன் விளையாடி வருகிறது.

தீபக் சஹர் விக்கெட்டும் பறிபோனது

பந்துவீச்சாளரானா தீபக் சஹரின் விக்கெட்டும் பறிபோனது. இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. களத்தில் கேப்டன் ரோகித் சர்மா இறங்கி விளையாடி வருகிறார்.

7 ஆவது விக்கெட்டும் பறிபோனது

42.4ஆவது ஓவிரல் ஷர்துல் தாக்குர் ஆட்டமிழந்தார். இந்திய அணி 7  விக்கெட்டுகளை பறிகொடுத்து 209 ரன்களை எடுத்துள்ளது. 41 பந்துகளில் 63 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

41 ஓவர்கள் முடிவில்..

41 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா 195 ரன்களை குவித்துள்ளது.

அரை சதம் பதிவு செய்த அக்சர் படேலும் ஆட்டமிழந்தார்

அரை சதம் பதிவு செய்து ஆட்டமிழந்தார் அக்சர் படேல். அவர் 56 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார்.

சதம் அடிக்க தவறிய ஸ்ரேயாஸ்..

அரை சதம் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர், 82 ரன்கள் எடுத்த போது கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

34 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 163/4

34 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணிக்கு இன்னும் 135 ரன்கள் தேவை

29 ஓவர்களில் இந்திய அணி 137 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இன்னும் 21 ஓவர்கள் இருக்கின்ற நிலையில், இந்தியாவுக்கு 135 ரன்கள் தேவை





இந்திய அணியின் நம்பிக்கையாக ஸ்ரேயாஸ்..

ஸ்ரேயாஸ் ஐயர் 69 பந்துகளில் அரை சதம் விளாசி நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்.

நின்று விளையாடும் ஸ்ரேயஸ்...

ஸ்ரேயஸ் ஐயர் நிதானமாக விளையாடி வருகிறார்.  அவர் தற்போது 56 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து வருகிறார். அவருடன் அக்சர் படேல் தோள் கொடுக்கிறார்.

ஆட்டமிழந்த கே.எல்.ராகுல்

18.3 வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கே.எல்.ராகுல், 18 பந்துகளில் 14 ரன்களே எடுத்திருந்தார்.

இந்திய அணி 51 ரன்கள்!

13.3 ஆவது ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்களை எடுத்தது.

10 ஓவர்கள் முடிவில்...

10 ஓவர்கள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது. வாஷிங்டன் சுந்தர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடக்கத்தில் தடுமாறும் இந்திய அணி...

6.1 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.

நடையைக் கட்டிய தவன்

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன், 8 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். 

5 ரன்களில் ஆட்டமிழந்த கோலி

வங்கதேசத்திற்கு எதிராக தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்த விராட் கோலி, 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டி சதம் கண்ட மெஹிதி ஹசன்.. இந்திய அணிக்கு 272 ரன்கள் இலக்கு!

83 பந்துகளில் 100 ரன்கள் அடித்து மெஹிதி ஹசன் அசத்தியுள்ளார். 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

உம்ரான் மாலிக் வேகத்தில் 77 ரன்களில் வெளியேறிய மஹ்முதுல்லாஹ்..!

இந்தியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 96 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த மஹ்முதுல்லாஹ், உம்ரான் மாலிக் வீசிய 47 வது ஓவரில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.  

200 ரன்களை கடந்த வங்கதேசம்... மெஹிதி ஹசன், மஹ்முதுல்லாஹ் அபாரம்..!

60 ரன்களுக்குள் 6 விக்கெட்களை இழந்த வங்கதேசம் அணி, தற்போது அதே விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை கடந்து 46வது ஓவரில் விளையாடி வருகிறது

அரைசதம் கடந்த மெஹிதி ஹசன், மஹ்முதுல்லாஹ்..!

69 ரன்களுக்கு ஆறு விக்கெட் இழந்து தடுமாறி கொண்டிருந்த வங்கதேச அணியை மெஹிதி ஹசன் -மஹ்முதுல்லாஹ் ஜோடி தலா அரைசதம் அடித்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 

150ஐ தொட்ட வங்கதேசம்..!

போட்டியின் 36வது ஓவரில் வங்கதேசம் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து, மீள முயற்சி செய்து வருகிறது. 

100 ரன்களைக் கடந்த வங்காள தேசம்..!

மளமளவென விக்கெட்டுகளை இழந்த வங்காளதேசம், தற்போது 28.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்துள்ளது. 

அடுத்தடுத்து விழும் விக்கெட் மழை; 50 ஓவர்கள் தாக்குபிடிக்குமா வங்கதேசம்?

19 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்து திணறிவருகிறது. 

4வது விக்கெட்டும் வீழ்ந்தது

வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் வங்கதேச அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஷகிப் அல்-ஹசன் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். தற்போது 17 ஓவர்கள் முடிவில் 66 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்துள்ளது. 

மூன்றாவது விக்கெட்டை இழந்த வங்கதேசம்..!

உம்ரான் மாலிக் வீசிய 14வது ஓவரின் முதல் பந்தில் வங்கதேசம் தனது மூன்றாவது விக்கெட்டையும் இழந்துள்ளது. தற்போது 13.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் என்ற நிலையில் உள்ளது. 

50ஐக் கடந்த வங்கதேசம்..!

13 ஓவர்கள் முடிவில் வங்க தேசம் அணி 52 - 2 என்ற நிலையில் உள்ளது.

2வது விக்கெட்டையும் கைப்பற்றிய முகமது சிராஜ்..!

வங்கதேச அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி வரும் முகமது சிராஜ் தொடக்க வீரர்கள் இருவரையும் அடுத்தடுத்து வீழ்த்தியுள்ளார். தற்போது வங்கதேச அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. 

விழுந்தது முதல் விக்கெட்..!

தொடக்க வீரராக களம் இறங்கிய அனுமல் இரண்டு ஃபோர்களை பறக்கவிட்டு முகமது சிராஜ் பந்து வீச்சில், எல்பிடபள்யூ ஆகி வெளியேறினார். 

களமிறங்கியது வங்கதேசம்..!

டாஸ் வென்ற வங்கர்தேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியுள்ளது. அனமுல் மற்றும் லிட்டான் தாஸ் ஆகியோர் வங்கதேச அணியின் இன்னிங்ஸை தொடங்கியுள்ளனர். 

அணியில் இணையும் அக்‌ஷர் பட்டேல்..!

கடந்த போட்டியில் களமிறங்கிய ஷபாஸ்க்கு பதிலாக அக்‌ஷர் பட்டேல் இந்த போட்டியில் களமிறங்குகிறார். 

தொடரை தக்கவைக்குமா இந்திய அணி..?

முதலாவது ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியை வென்றால் மட்டுமே இந்திய அணி தொடரை தக்கவைக்க முடியும் என்பதால், இந்த போட்டியில் இந்திய அணி மிக கவனமாக விளையாடும் என எதிர்பார்க்கலாம். 

Background

IND vs BAN 2nd ODI Score Live:


வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி தாக்காவில் உள்ள ஷேர் இ பங்களா மைதானத்தில் இன்று (டிச.07) காலை 11.30 மணிக்குத் தொடங்கியது.


இந்திய அணி வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்து வங்க தேச அணியிடம் பரிதாபமாகத் தோல்வியுற்றது. 


தொடரை தக்க வைக்குமா இந்தியா?


மேலும், முதல் ஒருநாள் போட்டியில் ஸ்லோ ஓவர் ரேட்டை உபயோகித்ததாக இந்திய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டு முன்மொழியப்பட்ட அனுமதியை ஏற்றுக்கொண்டார். எனவே முறையான விசாரணை தேவையில்லை என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


முதல் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வங்க தேச அணி தொடரைக் கைப்பற்றும் உறுதியுடன் இன்று களமிறங்கும் நிலையில், அதேபோல், இன்றைய போட்டியில் வென்று இந்தியா தொடரைத் தக்க வைக்குமா என ரசிகர்களுக்கு எதிர்ப்பார்த்து காத்துள்ளனர்.


ஷேர் இ பங்களா மைதானத்தில் மைதானத்தில் 22 போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி 14 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது. மழை காரணமாக ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.


ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் தோல்விக்கு பிறகு, இந்திய அணி அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது. இதற்காக டி20 உலகக் கோப்பை பின் நியூசிலாந்து சென்ற இந்திய அணி டி20 தொடரை வென்ற கையோடு, ஒருநாள் தொடரை இழந்தது. 


அந்த தொடரில் டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவானும் தலைமை தாங்கினர்.


மற்ற தொடர்கள், மற்ற நாடுகள் சுற்றுபயணம் மேற்கொள்ளும்போது வங்கதேச அணி தடுமாறினாலும், தனது சொந்த மண்ணில் எதிரணிகளை புலியாக புரட்டி எடுத்து வருகிறது. கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு டி20 தொடரை வென்றது. அதேபோல், கடந்த 2015ம் ஆண்டு சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வென்றது. அதேபோல், 2007 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி, வங்கதேசத்திற்கு தோல்வியடைந்தது இன்றளவும் யாராலும் மறக்க முடியாதது. 


கணிக்கப்பட்ட இந்திய அணி: 


1. ரோகித் ஷர்மா (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. விராட் கோலி, 4. ஷ்ரேயாஸ் ஐயர், 5. கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), 6. உம்ரான் மாலிக், 7. வாஷிங்டன் சுந்தர், 8. அக்சர் படேல், 9. ஷர்துல் தாக்கூர், 10. தீபக் சாஹர், 11. முகமது சிராஜ்


கணிக்கப்பட்ட வங்கதேச அணி:


1. லிட்டன் தாஸ் (கேப்டன்), 2. அனாமுல் ஹக், 3. ஷாகிப் அல் ஹசன், 4. முஷ்பிகுர் ரஹீம் (வாரம்), 5. மஹ்முதுல்லா, 6. அபிஃப் ஹொசைன், 7. யாசிர் அலி, 8. மெஹிதி ஹசன் மிராஸ், 9. ஹசன் மஹ்மூத், 10. முஸ்தபிஸுர் ரஹ்மான், 11. எஹோபாஸ் ஹின்து

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.