இந்தியா - வங்காளதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாள் முடிபில் நேற்று வங்கதேச அணி, 12 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து, 4வது நாள் தொடக்கத்தில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணி, மதிய இடைவேளையில் விக்கெட் இழப்பின்றி 119 ரன்கள் எடுத்திருந்தது. மதிய உணவுக்கு பின்னர் 67 ரன்களில் பேட்டிங் செய்த நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, உமேஷ் யாதவ் வீசிய லென்த் குறைவாக களமிறங்கிய ஒரு வித்தியாசமான பந்து வீச்சை விரட்டியபோது எட்ஜ் ஆனது.
இதையடுத்து, முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த விராட் கோலி, பந்து அவரது உள்ளங்கையில் இருந்து வெளியேறியது. ஆனால் அருகில் நின்ற பண்ட், இடதுபுறம் தாவி குதித்து கேட்சை பிடித்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தொடர்ந்து, 156 ரன்களை சந்திந்து 67 ரன்கள் எடுத்திருந்த ஹொசைன் கவலையுடன் பெவிலியன் திரும்பினர்.
டிக்ளர் செய்த இந்தியா:
இந்திய அணி 2வது இன்னிங்சில் 258 ரன்களை குவித்து டிக்ளேர் செய்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி 512 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம் வங்காளதேசத்திற்கு 513 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய அணி வங்காளதேசத்தை முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு சுருட்டியது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்காளதேசத்திற்கு நெருக்கடி அளித்தார். இதையடுத்து, 254 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் பேட்டிங்கை கேப்டன் கே.எல்.ராகுல் – சுப்மன்கில் தொடங்கினர். ஃபார்மில் இல்லாமல் தடுமாறி வரும் கே.எல்.ராகுல் இந்த இன்னிங்சில் நிதானமாகவே ஆட்டத்தை தொடங்கினார்.
அவர் ஓரிரு ரன்களாக எடுத்து வந்த நிலையில், சுப்மன்கில் இயல்பாக ரன்களை சேர்த்தார். கே.எல்.ராகுல் 23 ரன்கள் எடுத்திருந்தபோது 3 பவுண்டரிகள் விளாசிய நிலையில் கலீத் அகமது பந்தில் அவுட்டானார். அடுத்து புஜாரா – சுப்மன்கில் ஜோடி சேர்ந்தது. இருவரும் இணைந்து மிகவும் நிதானமாகவும் ஏதுவான பந்துகளை மட்டுமே விளாசினார். தொடக்கத்தில் மிகவும் நிதானமாக ரன்களை சேர்த்த புஜாரா அதிரடிக்கு மாறினார்.
அபாரமாக ஆடிய சுப்மன்கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை விளாசினார். அவர் 110 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய புஜாரா அதிரடிக்கு மாறினார். அவர் 130 பந்துகளில் சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 19 சதம் இதுவாகும். புஜாரா சதம் விளாசியதும் இந்தியா டிக்ளேர் செய்தது. 258 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர் செய்தது.
தொடர்ந்து 513 ரன்கள் இலக்குடன் களமிறங்கி ஆடி வந்த வங்காளதேசம் தற்போது 6 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.