இந்திய-வங்காளதேச அணிக்ளுக்கு இடையிலான முதலாவது டெஸ்டி போட்டியின் 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதில் வங்க தேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறவுள்ளதால், வங்கதேச அணி வெற்றி பெற 241 ரன்கள் தேவைப்படுகிறது. ஆனால் அந்த அணியின் கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
513 ரன்கள் இலக்கு:
முதல் இன்னிங்சில் இந்திய அணி, 404 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இந்திய அணி 512 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன்மூலம் வங்காளதேசத்திற்கு 513 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. முன்னதாக, இந்திய அணி வங்காளதேசத்தை முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு சுருட்டியது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்காளதேசத்திற்கு நெருக்கடி அளித்தார். இதையடுத்து, 254 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் பேட்டிங்கை கேப்டன் கே.எல்.ராகுல் – சுப்மன்கில் தொடங்கினர். ஃபார்மில் இல்லாமல் தடுமாறி வரும் கே.எல்.ராகுல் இந்த இன்னிங்சில் நிதானமாகவே ஆட்டத்தை தொடங்கினார்.
அவர் ஓரிரு ரன்களாக எடுத்து வந்த நிலையில், சுப்மன்கில் இயல்பாக ரன்களை சேர்த்தார். கே.எல்.ராகுல் 23 ரன்கள் எடுத்திருந்தபோது 3 பவுண்டரிகள் விளாசிய நிலையில் கலீத் அகமது பந்தில் அவுட்டானார். அடுத்து புஜாரா – சுப்மன்கில் ஜோடி சேர்ந்தது. இருவரும் இணைந்து மிகவும் நிதானமாகவும் ஏதுவான பந்துகளை மட்டுமே விளாசினார். தொடக்கத்தில் மிகவும் நிதானமாக ரன்களை சேர்த்த புஜாரா அதிரடிக்கு மாறினார்.
அபாரமாக ஆடிய சுப்மன்கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை விளாசினார். அவர் 110 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய புஜாரா அதிரடிக்கு மாறினார். அவர் 130 பந்துகளில் சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 19 சதம் இதுவாகும். புஜாரா சதம் விளாசியதும் இந்தியா டிக்ளேர் செய்தது. 258 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர் செய்தது.
ஜாகீர் சதம்:
அதன் பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி நிதானமான ஆட்டத்தினை வெள்இப்படுத்தியது. குறிப்பாக ஆந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜஹீர் 224 பந்துகளில் 100 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதுதான் அவரது முதல் டெஸ்ட் சதம் ஆகும். அதேபோல் மற்றொரு தொடக்கவீரர் சாண்ட்டோ 64 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடதக்கது.
4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வங்க தேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறவுள்ளதால், வங்கதேச அணி வெறி பொற 241 ரன்கள் தேவைப்படுகிறது. ஆனால் அந்த அணியின் கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டும் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது களத்தில் சஹிப் அல் ஹசன் 40 ரன்களுடனும், மெஹதி 9 ரன்களுடனும் உள்ளனர்.