ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. முதலில் பேட் செய்யும் இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயம் செய்யுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். 


இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதால் நிச்சயம் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் ப்ளேயின்ஃப் லெவனில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் அஷ்வின் சேர்க்கப்படவில்லை. அதேபோல் அரையிறுதியில் களமிறங்கிய அதே அணியே இறுதிப் போட்டியிலும் களமிறங்குகின்றது. இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக உலகக் கோப்பையில் இருந்து விலகிய பின்னர், அணியில் இருந்து ஷர்துல் தகூர் வெளியேற்றப்பட்டு சூர்யகுமார் யாதவ் மற்றும் முகமது ஷமி சேர்க்கப்பட்டனர். இதில் முகமது ஷமி 23 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 


இந்தியா பிளேயிங் லெவன்:


ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வ), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்


ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்:


டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ்(w), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்