சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த சாதனை ரோஹித் சர்மாவின் பெயரில் இருந்தது. தற்போது அந்த சாதனையை ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் சமன் செய்துள்ளார். நேற்று கவுகாத்தி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் சதம் அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றார். நேற்றைய இன்னிங்ஸில் மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 8 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் குவித்தார்.


இந்திய அணி முன்னிலை: 


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-1 என எட்டியுள்ளது, மீதமுள்ள இரண்டு போட்டிகள் முறையே ராய்ப்பூரில் மற்றும் பெங்களூருவில் நடைபெறும். இருப்பினும், தனது அற்புதமான சதத்தால், மேக்ஸ்வெல் டி20 சர்வதேச வடிவத்தில் அதிக சதங்கள் அடித்த வீரர் ரோஹித் சர்மாவை சமன் செய்துள்ளார்.


ரோஹித் சர்மா சாதனை சமன்: 


ரோஹித் சர்மா சர்வதேச டி20 வடிவத்தில் அதிகபட்சமாக 4 சதங்களை அடித்துள்ளார், இப்போது ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் தனது 4 டி20 சதங்களுடன் ரோஹித்துக்கு சமமாக வந்துள்ளார். ரோஹித் சர்மா 140 டி20 இன்னிங்ஸ்களில் நான்கு சதங்கள் அடித்துள்ள நிலையில், மேக்ஸ்வெல் இந்த சாதனையை 92 டி20 இன்னிங்ஸ்களில் மட்டுமே செய்துள்ளார். சர்வதேச டி20யில் மேக்ஸ்வெல்லின் சிறந்த ஸ்கோர் ஆட்டமிழக்காமல் 145 ரன்களும், ரோஹித் சர்மாவின் சிறந்த ஸ்கோர் 118 ரன்களும் ஆகும். சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 3 சதங்கள் அடித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.






டி20 வரலாற்றில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியல்: 



  1. ரோஹித் சர்மா - 4 சதங்கள்

  2. கிளென் மேக்ஸ்வெல் - 4 சதங்கள்

  3. பாபர் அசாம் - 3 சதங்கள்

  4. சபாவூன் டேவிசி - 3 சதங்கள் 

  5. கொலின் முன்ரோ - 3 சதங்கள்

  6. சூர்யகுமார் யாதவ் - 3 சதங்கள்

  7. ஃபகீன் நசீர் - 2 சதங்கள்

  8. முகமது வாசிம் - 2 சதங்கள்

  9. பிரண்டன் மெக்கலம் - 2 சதங்கள்

  10. ஆரோன் பின்ச் - 2 சதங்கள் 


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 3வது டி20 போட்டியில் இந்தியாவின் ருதுராஜ் கெய்க்வாட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 வடிவத்தில் சதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ருதுராஜ் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து, அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்களுக்கு கொண்டு சென்றார்.






223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஆரம்பத்தில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை இழந்து தடுமாறினர். அதன்பிறகு மேக்ஸ்வெல்லின் சதம் இன்னிங்ஸால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்களாகக் குறைத்தது. போட்டியில் வென்றார்.