IND vs AUS Final Score LIVE: 6 வது உலக மகுடம் சூடியது ஆஸ்திரேலியா; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
IND vs AUS World Cup 2023 Final LIVE Score: உலகக் கோப்பை 2023ன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான லைவ் ஸ்கோர் அப்டேட்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
43 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்று 6வது உலகக் கோப்பையை வென்றது. இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
120 பந்துகளில் 137 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெறச் செய்த ஹெட் அவுட்.
களமிறங்கியது முதல் சிறப்பாக விளையாடி வரும் லபுசேன் 99 பந்தில் 53 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 11 ஓவர்களில் 22 ரன்கள் தேவை.
37 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் சேர்த்து வெற்றியை நோக்கி முன்னேறி வருகின்றது.
வெற்றி இலக்கை நோக்கி சிறப்பாக விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி 27.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் சேர்த்துள்ளது.
27 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் சேர்த்துள்ளது.
டிராவிஸ் ஹெட் - லபுசேன் கூட்டணி 120 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியா அணி 26 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை 144 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலியா அணி வெற்றிக்கு இன்னும் 97 ரன்கள் தேவை.
ஆஸ்திரேலியா அணி 25 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 135 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 106 ரன்கள் தேவை.
ஆஸ்திரேலியா அணி 24 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 127 ரன்கள் சேர்த்துள்ளது.
தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வரும் ஹெட் தனது அரைசத்தினை 58 பந்துகளில் எட்டினார்.
21 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 110 ரன்கள் சேர்த்துள்ளது.
லபுசேன் - டிராவிஸ் ஹெட் கூட்டணி 83 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றனர்.
20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் சேர்த்துள்ளது.
19 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டினை இழந்து 95 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 17வது ஓவரில் டிராவிஸ் ஹெட் பவுண்டரி விளாசியுள்ளார்.
போட்டியின் 16வது ஓவரின் 5வது பந்தில் டிராவிஸ் ஹெட் தனது முதல் சிக்ஸர் விளாசினார்.
ஆஸ்திரேலியா அணி 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் சேர்த்துள்ளது.
15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் சேர்த்துள்ளது.
14 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆஸ்திரேலியா அணி 13 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த ஓவரில் இரண்டு ரன்கள் சேர்த்தது.
12 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் சேர்த்துள்ளது.
11 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆஸ்திரேலியா அணி முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்டினை இழந்து 60 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ோட்டியின் 10வது ஓவரில் ஹெட் அடுத்தடுத்து பவுண்டரி விளாசி அச்சுறுத்தி வருகின்றார்.
9 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி 8.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 51 ரன்கள் சேர்த்துள்ளது.
8வது ஓவரை வீசிய ஷமி மெய்டனாக வீசியுள்ளார். 8 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் சேர்த்துள்ளது.
மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேனான ஸ்மித் தனது விக்கெட்டினை பும்ரா பந்தில் இழந்து வெளியேறினார்.
போட்டியின் 7வது ஓவரில் ஸ்மித் தனது ரன் கணக்கை பவுண்டரி விளாசி துவங்கியுள்ளார்.
போட்டியின் 6வது ஓவரை வீசிய முகமது ஷமி அந்த ஓவரில் ஒரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்தார். 6 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 42 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 5வது ஓவரை வீசிய பும்ரா அந்த ஓவரில் ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் விக்கெட் கைப்பற்றினார்.
போட்டியின் 5வது ஓவரில் மிட்ஷெல் மார்ஷ் தனது விக்கெட்டினை 15 ரன்னில் பும்ரா பந்தில் இழந்து வெளியேறினார்.
4 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 41 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மார்ஷ் ஆஸ்திரேலியா அணியின் முதல் சிக்ஸரை விளாசியுள்ளார்.
முதல் ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்த பும்ரா, தான் வீசிய மூன்றாவது ஓவரில் ஒரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்துள்ளார். 3 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 29 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி 2 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 28 ரன்கள் சேர்த்துள்ளது.
நடப்பு உலகக் கோப்பையில் 24 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளராகியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் வார்னரின் விக்கெடினை முகமது ஷமி வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா அணி முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி மூன்று பவுண்டரிகளுடன் 15 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் முதல் பந்தில் வார்னர் கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பினை கோலி தவறவிட, அது பவுண்டரியாக மாறியது.
241 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி களமிறங்கியுள்ளது.
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
49 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் சேர்த்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டினை 28 பந்தில் 18 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
47 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணி 46 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
45 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் சேர்த்துள்ளது.
களமிறங்கி 3 பந்துகளில் 1 ரன் சேர்த்த நிலையில் பும்ரா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
44 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் சேர்த்துள்ளது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நேரில் பார்க்க பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சற்று நேரத்தில் வரவுள்ளார். அவர் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து மைதானத்திற்கு புறப்பட்டு விட்டார்.
10 பந்துகளில் 6 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை வெளியேறினார்.
43 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் சேர்த்துள்ளது.
மிகவும் நிதானமாக ஆடி வந்த கே.எல். ராகுல் தனது விக்கெட்டினை 107 பந்தில் 66 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
41 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணி 40.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் சேர்த்துள்ளது.
கே. எல். ராகுல் இதுவரை 101 பந்துகளை எதிர்கொண்டு 63 ரன்கள் சேர்த்துள்ளார்.
39 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் சேர்த்துள்ளனர்.
27வது ஓவருக்குப் பின்னர் இந்திய அணி ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அதன் பின்னர் 39வது ஓவரில் பவுண்டரி அடித்துள்ளார் ராகுல்.
இந்திய அணி கடைசி 72 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.
38 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் சேர்த்துள்ளது.
37 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
36 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணியின் 7வது வீரராக சூர்யகுமார் யாதவ் களமிறங்கியுள்ளது.
இந்திய அணி 35.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணியின் ஜடேஜா தனது விக்கெட்டினை 9 ரன்கள் சேர்த்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
35 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
நெருக்கடியான சூழலில் களமிறங்கிய கே.எல். ராகுல் பொறுப்பாகவும் பொறுமையாகவும் விளையாடி 86 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டினார்.
34 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் சேர்த்து மந்தமாக ரன்கள் சேர்த்து வருகின்றது.
இந்திய அணி 33 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. களத்தில் கே.எல். ராகுல் 47 ரன்களுடன் விளையாடி வருகின்றார்.
32 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது.
கே.எல். ராகுல் 74 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து தனது அரைசத்தினை நோக்கி விளையாடி வருகின்றார்.
31 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்து நெருக்கடியில் விளையாடி வருகின்றது.
30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணியின் தரப்பில் 6வது வீரராக ஜடேஜா களமிறங்கியுள்ளார்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தனது விக்கெட்டினை பேட் கம்மின்ஸ் வீசிய 29வது ஓவரில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 54 ரன்கள் சேர்த்தார்.
28 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி 27 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி 97 பந்துகளுக்குப் பிறகு பவுண்டரி விளாசியுள்ளது.
11வது ஓவரில் இருந்து 26வது ஓவர் வரை இந்திய அணி ஒரு பவுண்டரி கூட விளாசவில்லை. 27வது ஓவரில் கே.எல். ராகுல் பவுண்டரி விளாசியுள்ளார்.
26 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 135 ரன்கள் சேர்த்துள்ளது.
56 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார் விராட் கோலி. இவர் 4 பவுண்டரி விளாசியுள்ளார்.
கேல்.ராகுல் - விராட் கூட்டணி 88 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்துள்ளது.
25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணி 11வது ஓவரில் இருந்து 24வது ஓவர் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.
24 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி 23 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
உலக கோப்பை இறுதிப்போட்டியின் போது ஆடுகளத்திற்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 ஓவர்கள் முடிவில் இந்தியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
21ஓவர்கள் பந்து வீசியுள்ள ஆஸ்திரேலியா அணி 22வது ஓவரை வீசுவதற்கு தனது 7வது பந்து வீச்சாளரைப் பயன்படுத்துகின்றது.
21 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 21வது ஓவரில் இந்திய அணி 4 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி 11வது ஓவரில் இருந்து 20வது ஓவர் வரை ஒரு பவுண்டரிகூட விளாசவில்லை.
20 ஓவர்களில் இந்திய அணியின் ரன்ரேட் 5.75ஆக உள்ளது.
20 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் சேர்த்துள்ளது.
19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
விராட் கோலி - கே.எல். ராகுல் கூட்டணி 50 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றனர்.
இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியின் 18வது ஓவரை வீசிய மேக்ஸ்வெல் அந்த ஓவரை மெய்டனாக வீசியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் சொந்த ஊரில் பெரிய திரையில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஒளிபரப்பப்படுகின்றது.
17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் சேர்த்துள்ளது.
ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ரோகித் சர்மா. இந்த உலகக் கோப்பையில் அவர் 597 ரன்கள் சேர்த்துள்ளார்.
16 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் சேர்த்து நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றது.
3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் இந்திய அணி 15.4 ஓவர்கள் முடிவில் 100 ரன்கள் சேர்த்துள்ளது. அணியின் ரன்ரேட் 6.32ஆக உள்ளது.
3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் இந்திய அணி 15.4 ஓவர்கள் முடிவில் 100 ரன்கள் சேர்த்துள்ளது. அணியின் ரன்ரேட் 6.32ஆக உள்ளது.
3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் இந்திய அணி 15.4 ஓவர்கள் முடிவில் 100 ரன்கள் சேர்த்துள்ளது. அணியின் ரன்ரேட் 6.32ஆக உள்ளது.
15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணி 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணி 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 89 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
12 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
11 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை 82 ரன்கள் சேர்த்துள்ளது.
களமிறங்கி ஒரு பவுண்டரி மட்டும் விளாசி தனது விக்கெட்டினை ஸ்ரேயஸ் ஐயர் தனது விக்கெட்டினை இழந்தார்.
10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டினை இழந்து 80 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா தனது விக்கெட்டினை 31 பந்தில் 47 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டினை இழந்துள்ளார்.
10வது ஓவரின் 2வது பந்தில் ரோகித் சர்மா சிக்ஸர் விளாசியுள்ளார்.
இந்திய அணி 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 66 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
8 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 61 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணிக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்க ரசிகர்கள் மைதானத்தை நிரப்பியுள்ளனர்.
இந்திய அணிக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்க ரசிகர்கள் மைதானத்தை நிரப்பியுள்ளனர்.
இந்திய அணி 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 54 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணி 6.3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 52 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் 7வது ஓவரின் முதல் மூன்று பவுண்டரிகளை விராட் விளாசி அமர்க்களப்படுத்தியுள்ளார்.
போட்டியின் 7வது ஓவரின் முதல் பந்தில் கோலி தனது முதல் பவுண்டரியை விளாசியுள்ளார்.
6 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 40 ரன்கள் சேர்த்துள்ளது.
5வது ஓவரின் கடைசிப் பந்தில் ரோகித் சர்மா இந்த தொடரின் 53வது சிக்ஸரை விளாசினார்.
5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 37 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 4.2 ஓவரில் தனது விக்கெட்டினை 4 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
நடப்பு உலகக் கோப்பையில் ரோகித் சர்மா 52 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்த போட்டியின் முதல் சிக்ஸரை ரோகித் சர்மா விளாசியுள்ளார்.
3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இரண்டு ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. இரண்டு ஓவர்களும் ரோகித் சர்மா பேட்டிங் செய்தார்.
போட்டியின் இரண்டாவது ஓவரின் 2வது மற்றும் மூன்றாவது பந்தில் ரோகித் சர்மா இரண்டு பவுண்டரிகள் விளாசியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அடிக்க முயற்சித்த இரண்டு பவுண்டரிகளை ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தடுத்துள்ளனர்.
முதல் ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த 3 ரன்களையும் ரோகித் சர்மா எடுத்தார்.
இந்திய அணியின் ரன் கணக்கினை ரோகித சர்மா 2 ரன்கள் எடுத்து தொடங்கி வைத்துள்ளார்.
போட்டியின் முதல் ஓவரை மிட்ஷெல் ஸ்டார்க் வீசுகின்றார்.
இந்திய அணியின் இன்னிங்ஸினை ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடங்கியுள்ளனர்.
மைதானத்தில் தேசிய கீதம் இசைக்க இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தயாராக உள்ளன. ஆஸ்திரேலிய அணி தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகு முதலில் பந்துவீச களம் இறங்கும். இந்த போட்டி சரியாக 2 மணிக்கு தொடங்கியது.
இந்திய அணியின் தேசிய கீதம் இசைக்கப்படுவதோ மைதானத்தில் உள்ள 1.25 லட்சம் ரசிகர்களும் சேர்ந்து பாடுவதால் தேசிய கீத பாடலின் ஒலி விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது.
இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா அணியின் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய விமானப்படையின் சூர்யகிரண் குழுவினர் விமான கண்காட்சியை நடத்தி வருகின்றனர். பல விமானங்கள் வானத்தில் ஸ்டண்ட் செய்து பார்வையாளர்களை வசீகரிக்கின்றன. இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கவுள்ளது.
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
டாஸ் போட்ட பிறகு அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக விமான கண்காட்சி நடைபெற்றது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இதற்கு முன் மதியம் 1.30 மணிக்கு டாஸ் போடப்பட இருக்கிறது. இந்த டாஸ் முடிந்ததும் விமான கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது.
ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா vs ஆஸ்திரேலியா நேருக்கு நேர் மோதிய நிகழ்வுகளை முழுமையாக பார்க்கலாம்..
1983 முதல் 2023 வரை.. இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகளின் உலகக் கோப்பை மோதல்கள்.. ஒரு பார்வை?
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் களமிறங்கும் இந்திய அணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டியை காண ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி உட்பட ஒட்டுமொத்த அணியும் நரேந்திர மோடி மைதானத்திற்கு கிளம்பியது.
2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் ஒரு சுவாரஸ்யமான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்திய அணியின் ஜெர்சியின் கட்அவுட்டுக்கு பின்னால் அவர் நிற்பதைக் காணலாம்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப் போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில் இப்போதே நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு முன்பு ரசிகர்கள் கூட்டம் அலை மோத தொடங்கியது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் நண்பகல் 2 மணிக்கு பிரமாண்டமாக தொடங்குகிறது. இதற்கு முன் நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய விமானப்படை விமான கண்காட்சியை நடத்தவுள்ளது. அதை தொடர்ந்து பார்வையாளர்களுக்காக லேசர் மற்றும் ஒளிக்காட்சி நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்காக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்தார்.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது அகமதாபாத் நகரம் மற்றும் நரேந்திர மோடி மைதானத்தில் 6,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த உலகக் கோப்பையில் மிடில் ஓவரில் அதிக விக்கெட்கள் (17) எடுத்தவர் ஆடம் ஜம்பா
இந்த உலகக் கோப்பையில் இந்திய பந்துவீச்சாளர்கள் இதுவரை 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஒரே பதிப்பில் இரண்டு அணியினர் மட்டுமே இத்தகைய சாதனையை படைத்துள்ளனர். ஆஸ்திரேலியா கடந்த 2007ல், 97 விக்கெட்களும், 2003ல் 96 ரன்கள் எடுத்தது. தற்செயலாக, அந்த இரண்டு முறையும் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 11 போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் 2023 உலகக் கோப்பை 2023ல் 8 போட்டிகளில் 537 பார்ட்னர்ஷிப் ரன்களை அடித்துள்ளனர். இதற்கு முன்பு, யாரும் இத்தகைய பார்ட்னர்ஷிப்பை அமைத்தது இல்லை.
முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் சொதப்பினாலும் லீக் சுற்றின் முடிவில் தொடர் வெற்றிகளை குவித்தது. வார்னர். டிராவிஸ் ஹெட் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் பேட்டிங்கில் ஜொலிக்கின்றனர். நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை. ஜாம்பா மட்டும் விக்கெட் வேட்டை நடத்தியுள்ளார். ஏராளமான நாக்-அவுட் போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவம் ஆஸ்திரேலிய அணிக்கு கை கொடுக்கலாம்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூரில் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்திய அணி, தோல்வியையே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடர்ந்து நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். எந்தவொரு அநாவசியமான முயற்சிகளையும் செய்யாமல், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். ஷமி, பும்ரா ஆகியோர் வேகத்தில் மிரட்ட, ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோர் சுழலில் விக்கெட் வேட்டை நடத்தி வருகின்றனர். உள்ளூர் ரசிகர்களுக்கு மத்தியில் இறுதிப்போட்டியில் விளையாடுவது, இந்திய அணிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.
டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் இங்கிலிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
1.30 லட்சம் பேர் அமரும் வசதி கொண்ட அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், இன்று ரசிகர்களால் நிரம்பி வழிய உள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமாக இன்றைய ஆடுகளம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், நேரம் செல்ல செல்ல பந்துவீச்சாளரக்ளும் சாதிக்கக் கூடும்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 150 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 57 வெற்றிகளையும், ஆஸ்திரேலியா அணி 83 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது . 10 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. உலகக் கோப்பையில் விளையாடிய 13 போட்டிகளில் ஆஸ்திரேலியா 8 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும், உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன
Background
IND vs AUS World Cup 2023 Final LIVE Score | இந்தியா ஆஸ்திரேலியா லைவ் ஸ்கோர்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும், உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா(India vs Australia) அணிகள் மோதுகின்றன. இதில், முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
உலகக் கோப்பை இறுதிப்போட்டி:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கியது. இந்தியாவில் நடைபெறும் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்றின் முடிவில் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்:
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இறுதிப்போட்டியை முன்னிட்டு மைதானத்தில் இந்திய விமானப்படையின் சாகசம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும் போட்டியை காண மைதானத்திற்கு வருவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி, 1999ம் ஆண்டிற்கு பிறகு உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற பின் ஒரு முறை கூட தோல்வியையே சந்திக்கவில்லை. அதேநேரம், 12 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2003ம் ஆண்டு தோல்விக்கு பழிவாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என நம்பப்படுகிறது.
பலம் & பலவீனங்கள்:
12 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூரில் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்திய அணி, தோல்வியையே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடர்ந்து நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். எந்தவொரு அநாவசியமான முயற்சிகளையும் செய்யாமல், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். ஷமி, பும்ரா ஆகியோர் வேகத்தில் மிரட்ட, ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோர் சுழலில் விக்கெட் வேட்டை நடத்தி வருகின்றனர். உள்ளூர் ரசிகர்களுக்கு மத்தியில் இறுதிப்போட்டியில் விளையாடுவது, இந்திய அணிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது. மறுமுனையில். முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் சொதப்பினாலும் லீக் சுற்றின் முடிவில் தொடர் வெற்றிகளை குவித்தது. வார்னர். டிராவிஸ் ஹெட் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் பேட்டிங்கில் ஜொலிக்கின்றனர். நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை. ஜாம்பா மட்டும் விக்கெட் வேட்டை நடத்தியுள்ளார். ஏராளமான நாக்-அவுட் போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவம் ஆஸ்திரேலிய அணிக்கு கை கொடுக்கலாம்.
நேருக்கு நேர்:
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 150 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 57 வெற்றிகளையும், ஆஸ்திரேலியா அணி 83 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது . 10 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. உலகக் கோப்பையில் விளையாடிய 13 போட்டிகளில் ஆஸ்திரேலியா 8 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
மைதானம் எப்படி?
1.30 லட்சம் பேர் அமரும் வசதி கொண்ட அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், இன்று ரசிகர்களால் நிரம்பி வழிய உள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமாக இன்றைய ஆடுகளம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், நேரம் செல்ல செல்ல பந்துவீச்சாளரக்ளும் சாதிக்கக் கூடும்.
ப்ளேயிங் 11 அணி:
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
ஆஸ்திரேலியா:
டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
வெற்றிக்கான வாய்ப்பு: இந்திய அணி வெற்றி பெற கூடுதல் வாய்ப்புள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -