ஜோஷ் ஹேசில்வுட் காயத்தில் இருந்து திரும்பியதால், இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் லெவன் அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு எதிரான அடிலெய்டில் நடந்த பகல்-இரவு பிங்க்-பால் டெஸ்ட் சிறப்பாக செயல்பட்ட ஸ்காட் போலண்டை அணியில் இருந்து பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது, இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் மோசமான பேட்டிங்கால் ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரையும் சமன் செய்தது.
இதையும் படிங்க: Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
பிரிஸ்பென் டெஸ்ட்:
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பென் கேபா மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சி மேற்க்கொண்டு வருகின்றனர்.
இந்திய அணி:
இந்திய அணியை பொறுத்தவரை பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முக்கியமான வீரர்கள் யாரும் இல்லமல் தற்காலிக கேப்டன் பும்ராவின் தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அடுத்து நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரெலிய அணியிடம் இந்திய படுமோசமாக தோல்வியுற்றது, இரண்டு இன்னிங்ஸ்சிலும் இந்திய பேட்ஸ்மென்கள் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை, பந்துவீச்சிலும் பும்ராவை தவிற மற்ற பந்து வீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தவில்லை. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Watch Video : அய்யோ போச்சே! பட கூடாத இடத்தில் பட்ட பந்து! அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
காயத்திலிருந்து மீண்ட ஹேசில்வுட்:
பெர்த்தில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, அடிலெய்டில் அசத்தலான வெற்றியுடன் ஆஸ்திரேலிய அணி பதிலடி கொடுத்தது. இருப்பினும், காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட் அடிலெய்டில் விளையாட முடியவில்லை. அவர் தற்போது முழு உடற்தகுதியை எட்டியதால் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆஸ்திரேலிய லெனில் மீண்டும் திரும்பினார். ஹேசல்வுட் திரும்பியதால் ஸ்காட் போலண்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இரண்டாவது டெஸ்டில் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், விளையாடும் லெவனில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
மைதானம் எப்படி?
வேகம் மற்றும் பவுன்சுக்கு பெயர போன பிரிஸ்பென் மைதானம் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிற்க்கும் சரிசமமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த மைதானத்தில் இந்திய அணி கடைசியாக விளையாடிய போது ஆஸ்திரேலிய அணியை 27 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது. ஆஸ்திரேலிய அணி கடைசியாக இங்கு விளையாடிய போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது.
இரண்டு அணிகளிலும் நல்ல தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளதால் பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் தலைவலி கொடுப்பார்கள்.
போட்டி தொடங்கும் நேரம்:
இந்த டெஸ்ட் போட்டி முதல் இரண்டு போட்டிகளை போல் இல்லாமல் அதிகாலையிலேயே தொடங்குகிறது. இந்திய நேரப்படி இந்த போட்டி காலை 05.50 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (C), ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் (Wk), சர்பராஸ் கான், விராட் கோலி, பிரசித் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரிஷப் பண்ட் (Wk), KL ராகுல், ஹர்ஷித் ராணா, அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில் , நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர்.
ஆஸ்திரேலிய அணி:
உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், அலெக்ஸ் கேரி (WK) பாட் கம்மின்ஸ் (C), மிட்ச் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.