இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு க்ளென் மேக்ஸ்வெல் ஒரு வரப்பிரசாதமாக இருந்தார். 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற அபார வெற்றி இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு, மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 8 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 104* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த இன்னிங்ஸில் மேக்ஸ்வெல்லின் ஸ்ட்ரைக் ரேட் 216.67. மேக்ஸ்வெல் தனது இன்னிங்ஸால் ஆஸ்திரேலியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று பல பெரிய சாதனைகளில் தனது பெயரை எழுதினார். இந்தநிலையில், நேற்றைய போட்டியில் மேக்ஸ்வெல் படைத்த சாதனைகள் என்னவென்று இங்கே பார்க்கலாம். 


டி20 சர்வதேச போட்டிகளில் வெற்றிகரமான ரன் சேஸிங்கில் அதிக சதங்கள்: 


3- கிளென் மேக்ஸ்வெல்
2- பாபர் அசாம்.






ஆஸ்திரேலிய அணிக்கு டி20யில் அதிவேக சதம் (பந்து வாரியாக):


47 பந்துகள் - ஆரோன் ஃபின்ச் vs இங்கிலாந்து, சவுத்தாம்ப்டன், 2013
47 பந்துகள் - ஜோஷ் இங்கிலிஸ் vs இந்தியா, விசாகப்பட்டினம், 2023
47 பந்துகள் - க்ளென் மேக்ஸ்வெல் vs இந்தியா, குவஹாத்தி, 2023
49 பந்துகள் - க்ளென் மேக்ஸ்வெல் vs இலங்கை, பல்லேகெலே, 2016. 


சர்வதேச டி20யில் அதிக சதம் அடித்தவர்கள்:



  1. ரோஹித் சர்மா - 4 சதங்கள்

  2. கிளென் மேக்ஸ்வெல் - 4 சதங்கள்

  3. பாபர் அசாம் - 3 சதங்கள்

  4. சபாவூன் டேவிசி - 3 சதங்கள் 

  5. கொலின் முன்ரோ - 3 சதங்கள்

  6. சூர்யகுமார் யாதவ் - 3 சதங்கள்

  7. ஃபகீன் நசீர் - 2 சதங்கள்

  8. முகமது வாசிம் - 2 சதங்கள்

  9. பிரண்டன் மெக்கலம் - 2 சதங்கள்

  10. ஆரோன் பின்ச் - 2 சதங்கள் 


டி20யில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர்கள்:


592 ரன்கள் - நிக்கோலஸ் பூரன்
554 ரன்கள் - கிளென் மேக்ஸ்வெல்
500 ரன்கள் - ஆரோன் பின்ச்
475 ரன்கள் - ஜோஸ் பட்லர்.


சர்வதேச டி20யில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள்:


42 சிக்ஸர்கள் - லெஸ்லி டன்பார் (செர்பியா) vs பல்கேரியா
39 சிக்ஸர்கள் - ரோஹித் சர்மா (இந்தியா) vs வெஸ்ட் இண்டீஸ்
37 சிக்ஸர்கள் - கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) vs இந்தியா
35 சிக்ஸர்கள் - ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா) vs இங்கிலாந்து






கடந்த போட்டியில் குறைந்த ரன்னில் அவுட்டான மேக்ஸ்வெல்: 


முன்னதாக திருவனந்தபுரத்தில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மேக்ஸ்வெல் குறைந்த ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது டி20யில் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்க, மேக்ஸ்வெல் 8 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அவரை வெளியேற்றிய பெருமையை அக்சர் படேல் பெற்றிருந்தார். ஆனால் மூன்றாவது போட்டியில் அதே மேக்ஸ்வெல் இந்தியாவுக்கு எதிராக அதிரடியாக சதம் அடித்து ஆஸ்திரேலியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.