IND vs AUS 3rd T20 LIVE: இந்திய அணியின் மோசமான பந்து வீச்சு... மேக்ஸ்வெல் அதிரடியால் ஆஸ்திரேலியா வெற்றி!
IND vs AUS 3rd T20 LIVE Score: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டி20 குறித்த அப்டேட்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
இந்திய அணியின் மோசமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணி அதிரடி வெற்றி பெற்றது. அதன்படி கடைசி வரை களத்தில் நின்ற மேக்ஸ்வெல் சதம் விளாசி அந்த அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 225 ரன்கள் எடுத்து இந்திய அணியை வீழ்த்தியது.
19 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்துள்ளது.
18 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
17 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 174 ரன்கள் எடுத்துள்ளது.
16 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ளது.
15 ஓவர்கள் முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் ரன் ஏதும் இன்றி விக்கெட்டை பறிகொடுத்தார். தற்போது ஆஸ்திரேலிய அணி 14 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்துள்ளது.
மார்கஸ் ஸ்டோனிஸ் 17 ரன்களில் அக்ஸர் பட்டேல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்
13 ஓவர்கள் முடிவில் 128 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது ஆஸ்திரேலியா.
12 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
10 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
9 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 99 ரன்கள் எடுத்துள்ளது.
8 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.
ஜோஸ் இங்கிலிஸ் 10 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். தற்போது ஆஸ்திரேலிய அணி 6.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் அவுட் ஆனார். மொத்தம் 18 பந்துகள் களத்தில் நின்ற அவர் 8 பவுண்டரிகள் உட்பட 35 ரன்கள் எடுத்தார்.
அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஹார்டி 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலிய அணி 46 ரன்கள் எடுத்துள்ளது.
2 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 25 ரன்கள் எடுத்துள்ளது. அதன்படி தொடக்க வீரராக களம் இறங்கிய டிராவிஸ் ஹெட் 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்துள்ளார்.
223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 1 ஓவர் முடிவில் 13 ரன்கள் எடுத்துள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட்டின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 222 ரன்கள் எடுத்துள்ளது. 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
52 பந்துகளில் 102 ரன்களை குவித்த இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட்.
19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 192 ரன்கள் எடுத்துள்ளது.
18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் 180 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது இந்திய அணி.
17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.
14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது.
13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 113 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
12 ஓவர்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அதன்படி , களத்தில் ருதுராஜ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் நிற்கின்றனர்.
அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்களை எடுத்துள்ளது இந்திய அணி. ருதுராஜ் 21 ரன்களும் சூர்யகுமார் 39 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 74 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அதன்படி, களத்தில் ருதுராஜ் மற்றும் சூர்ய குமார் ஆகியோர் நிற்கின்றனர்.
8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 66 ரன்களுடன் களத்தில் நிற்கிறது.
6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இஷான் கிஷன் 5 பந்துகள் களத்தில் நின்று ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
6 ரன்கள் மட்டுமே அடித்திருந்த ஜெய்ஸ்வால், 2வது ஓவர் வீசியிருந்த பெஹ்ரன்டோர்ஃப் பந்தில் மேத்யூ வேட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியின் முதல் ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 14 ரன்களை எடுத்துள்ளது.
டிராவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்கிலிஸ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்/கேப்டன்), நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் சங்கா, கேன் ரிச்சர்ட்சன்
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), ரிங்கு சிங், திலக் வர்மா, அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா
இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்களுக்கு இடையிலான 3வது டி20 போட்டியின்போது டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
Background
இந்தியா - ஆஸ்திரேலியா டி-20 தொடர்:
அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, தற்போது இந்தியா உடன் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளயாடி வருகிறது. மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் பிசிசிஐ வாய்ப்பளித்துள்ளது. விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் வெறி பெற்று இந்திய அணி, 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்:
அதன்படி, கவுகாத்தியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதன் நேரலையை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இந்த போட்டியில் வென்று தொடரை 3-0 என கைப்பற்ற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி தீவிரம் காட்டுகிறது. அதேநேரம், தொடரை இழந்துவிடக்கூடாது என ஆஸ்திரேலியாவும் மல்லுக்கட்டுகிறது. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
பலம் - பலவீனங்கள்:
ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் வாய்ந்த இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். உள்ளூர் மைதானங்களில் போட்டி நடைபெறுவது அவர்களுக்கு கூடுதல் சாதகமாக உள்ளது. இரண்டு போட்டிகளிலும் பேட்டிங்கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இந்திய வீரர்கள் பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்குகின்றனர். இன்றைய போட்டியில் ரன்களை கட்டுப்படுத்தாவிட்டால், வெற்றி பெறுவது கடினமாக இருக்கும். மறுமுனையில், உலகக் கோப்பையில் விளையாடிய அணியை பெரிய மாற்றம் எதுவும் இன்றி ஆஸ்திரேலிய அணி அப்படியே களமிறக்கியுள்ளது. இருப்பினும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இருப்பது, முதல் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இன்றைய போட்டியிலாவது அவர்களது பந்துவீச்சு எடுபடுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
மைதானம் எப்படி?
கவுகாத்தி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், இன்றைய போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கலாம் செலுத்தலாம். இரண்டாவது பாதியில் பனி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கூறப்படுகிறது. இந்திய அணி இதுவரை இங்கு 3 டி-20 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது. ஒரு போட்டிய்ல் முடிவு எட்டப்படவில்லை.
உத்தேச அணி விவரம்:
இந்திய அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா.
ஆஸ்திரேலியா:
ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ ஷார்ட்/டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், ஆரோன் ஹார்டி/மேக்ஸ்வெல், மேத்யூ வேட் (கேப்டன்), சீன் அப்போட், நாதன் எலிஸ், ஜாசன் பெரென்டோர்ப், தன்வீர் சங்கா/ஆடம் ஜம்பா.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -