IND vs AUS 3rd ODI LIVE: 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி.. மீண்டெழுந்து கெத்துகாட்டிய ஆஸ்திரேலிய அணி!
IND vs AUS 3rd ODI Score LIVE: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியின் லைவ் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி நாடு பக்கத்தில் இணைந்திருங்கள்.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்திய அணி 5 விக்கெட்டுகளை ஆடி வரும் நிலையில், நம்பிக்கை அளித்த ஸ்ரேயாஸ் அய்யர் 48 ரன்களில் போல்டானார்.
இந்திய அணி 5 விக்கெட்டுகளை ஆடி வரும் நிலையில், நம்பிக்கை அளித்த ஸ்ரேயாஸ் அய்யர் 48 ரன்களில் போல்டானார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடி வரும் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. தற்போது களத்தில் ஸ்ரேயாஸ் - சூர்யகுமார் யாதவ் உள்ளனர்.
இலக்கை நோக்கி ஆடி வரும் இந்திய அணி 200 ரன்களை கடந்து ஆடி வருகிறது. கே.எல்.ராகுல் - ஸ்ரேயாஸ் சிறப்பாக ஆடி வருகின்றனர்.
அரைசதம் அடித்த விராட்கோலி 51 ரன்கள் எடுத்த நிலையில் மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோகித்சர்மா சிறப்பாக ஆடி வந்த நிலையில் அவர் மேக்ஸ்வேல் பந்தில் எதிர்பாராதவிதமாக அவுட் ஆனார். அவர் 57 பந்துகளில் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 81 ரன்களுக்கு அவுட்டானர்.
இந்திய அணி 15 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்களுடன் ஆடி வருகிறது.
353 ரன்கள் இலக்கை நோக்கி அதிரடியாக ஆடி வரும் இந்திய அணி 74 ரன்களில் ஆடி வந்தபோது வாஷிங்டன் சுந்தர் 18 ரன்களில் அவுட்டானார்.
ரோகித்சர்மா 3 வடிவ போட்டிகளிலும் சேர்த்து 550 சிக்ஸர்களை சர்வதேச போட்டிகளில் அடித்துள்ளார்.
இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள இந்திய அணிக்காக ரோகித்ரசர்மா - வாஷிங்டன் சுந்தர் ஜோடி அபாரமாக ஆடி வருகின்றனர்.
இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள இந்திய அணிக்கு கேப்டன் ரோகித்சர்மாவுடன் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கியுள்ளார்.
இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு 353 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
6 விக்கெட்டுகளை இழந்த பிறகு ஆஸ்திரேலியாவின் லபுஷேனே அதிரடியாக ஆடி வருவதால் இந்திய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மித் 74 ரன்களில் அவுட்டான பிறகு அலெக்ஸ் கேரி 11 ரன்களில் அவுட்டாகவும் லபுஷேனே - மேக்ஸ்வெல் ஜோடி ஆடி வருகின்றனர். ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களுடன் ஆடி வருகிறது.
ஸ்மித் 74 ரன்களில் அவுட்டான பிறகு அலெக்ஸ் கேரி 11 ரன்களில் அவுட்டாகவும் லபுஷேனே - மேக்ஸ்வெல் ஜோடி ஆடி வருகின்றனர். ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களுடன் ஆடி வருகிறது.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் 96 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமடைந்தார்.
27 ஓவர்களில் 200 ரன்களை கடந்து ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மிட்செல் மார்ஷ் - ஸ்மித் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ் - ஸ்மித் 164 ரன்களுடன் ஆடி வருகிறது.
ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ் - ஸ்மித் 164 ரன்களுடன் ஆடி வருகிறது.
ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ் - ஸ்மித் 164 ரன்களுடன் ஆடி வருகிறது.
இந்திய அணிக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. ஸ்மித் 17 ரன்களும், மார்ஷ் 41 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
34 பந்துகளில் 56 ரன்கள் அடித்திருந்த டேவிட் வார்னர் ப்ரசித் கிருஷ்ணா பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
Background
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. தொடரின் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா அசைக்க முடியாத முன்னிலையில் உள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா கிளீன் ஸ்வீப் செய்ய பெரும் வாய்ப்பு உள்ளது. முதல் இரண்டு போட்டிகளை ஒப்பிடும் போது, மூன்றாவது ஒருநாள் போட்டியில் இரு அணிகளிலும் பெரிய மாற்றங்கள் இருக்கும். மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தலைமை பொறுப்பு ரோஹித் சர்மாவின் கையில் மீண்டும் வந்தநிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸும் திரும்பியுள்ளார்.
ரோகித் சர்மாவைத் தவிர, மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு விராட் கோலி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரையும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.எனினும், இந்த போட்டியில் ஐந்து முக்கிய வீரர்களும் மாற்றப்பட்டுள்ளனர். மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று ரோஹித் சர்மா செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்தார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு இன்னும் 13 வீரர்கள் மட்டுமே உள்ளனர்.
ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து இஷான் கிஷான் ஓப்பனிங் பொறுப்பை கையாளுகிறார். விராட் கோலி மூன்றாவது இடத்தில் விளையாடுவார். ஐயர் நான்காவது இடத்திலும், கேஎல் ராகுல் ஐந்தாவது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் ஆறாவது இடத்திலும் பேட்டிங் செய்வார்கள். ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் விளையாடும் 11-ல் சேர்க்கப்படலாம்.
இருப்பினும், இந்தியா மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்குகிறதா இல்லையா என்பது முடிவு செய்யப்படவில்லை. பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் விளையாடும் 11-ல் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்பது உறுதி. இந்தப் போட்டியில் அஸ்வினும் விளையாடவுள்ளார். குல்தீப் யாதவ் அல்லது பிரசித் கிருஷ்ணா விளையாடும் 11 இல் இடம்பெற்றுள்ளனர்.
விளையாடும் ப்ளேயிங் 11:
இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
ஆஸ்திரேலியா அணி: மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், தன்வீர் சங்கா, ஜோஷ் ஹேசில்வுட்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -