Ind vs Aus 3rd ODI LIVE: இறுதியில் விக்கெட்டுகளை மளமளவென இழந்த இந்தியா; 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி..!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 22 Mar 2023 09:49 PM
ஜடேஜா விக்கெட்..!

அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லுவார் என நம்பப்பட்ட ஜடேஜா ஆடம் ஜம்பா பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். 

ஹர்திக் விக்கெட்..!

நிதானமாக ஆடிவந்த ஹர்திக் பாண்டியா 40 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். 

200 ரன்களைக் கடந்த இந்திய அணி..!

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தத்தளித்து வந்தாலும், 39.3 ஓவர்கள் முடிவில் 203 ரன்கள் சேர்த்துள்ளது. 

சூர்யகுமார் யாதவ் டக்..!

இந்த சீரீயஸில் தொடர்ந்து சொதப்பி வந்த சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியிலும் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியுள்ளார். 

விராட் கோலி அவுட்..!

சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி ஸ்மித்தின் சிறப்பான கேப்டன்சியால் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியுள்ளர். 

கோலி அரைசதம்..!

இந்திய அணி ஒரு புறம் விக்கெட்டுகளை இழந்து வந்தாலும், நிதானமாக ஆடிவரும் விராட் கோலி 61 பந்தில் அரைசதம் அடித்துள்ளார். 

30 ஒவர்கள் முடிவில் இந்திய அணி..!

30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்து இலக்கை நோக்கி முன்னேறிவருகிறது. 

150 ரன்களைத் தொட்ட இந்திய அணி..!

சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி 29வது ஓவரில் 150 ரன்களைக் கடந்துள்ளது. 

100 ரன்களைக் கடந்த இந்திய அணி..!

18வது ஓவரில் கோலி பறக்கவிட்ட சிக்ஸர் மூலம் இந்திய அணி 100 ரன்களைக் கடந்துள்ளது. 

15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி..!

15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் சேர்த்துள்ளது. 

விக்கெட்..!

சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில் 49 பந்தில் 37 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியுள்ளார். 

12 ஓவர்கள் முடிவில் இந்திய அணி..!

12 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 77 ரன்கள் சேர்த்துள்ளது. 

விக்கெட்..!

ரோகித் 17 பந்தில் 30 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியுள்ளார். 

தொடங்கியது போட்டி..!

270 ரன்களை நோக்கி இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

ஆஸ்திரேலியா ஆல்-அவுட்..!

ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் சேர்த்துள்ளது. 

விக்கெட்..!

அதிரடியாக ஆடிவந்த அப்போட் 26 ரன்கள் சேர்த்த நிலையில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறியுள்ளார். 

அலெக்ஸ் கேரி விக்கெட்..!

நிதானமாக ஆடிவந்த அலெக்ஸ் கேரி குல்தீப் யாதவ் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியுள்ளார்.  

200 ரன்கள்..!

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் அஸ்திரேலிய அணி 37.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் சேர்த்துள்ளது. 

விக்கெட்..!

அக்‌ஷர் பட்டேல் பந்து வீச்சில் சிறப்பாக விளையாடிக்கொண்டு இருந்த மார்கஸ் ஸடைனிஸ் 25 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்துள்ளார்.  

30 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி..!

30 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்துள்ளது. 

லபுசேன் அவுட்..!

ஆஸ்திரேலிய அணியின் ஆஸ்தான பேட்ஸ்மேன்களில் ஒருவரான லபுசேன் 45 பந்தில் 28 ரன்கள் சேர்த்த நிலையில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் சுப்மன் கில்லிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். 

ப்ளாக் டிக்கெட் விற்ற 12 பேர் கைது..!

சென்னையில் தற்போது நடைபெற்றுவரும் இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்றதாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 ஓவர்கள் முடிவில்..!

25 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 126 ரனகள் சேர்த்துள்ளது. 

வார்னர் அவுட்..!

நிதானமாக ஆடிவந்த டேவிட் வார்னர் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து 23 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறியுள்ளார். 

100 ரன்களை எட்டிய ஆஸ்திரேலியா..!

19 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் சேர்த்துள்ளது. 

மிட்ஷெல் மார்ஸ் விக்கெட்..!

அரைசதத்தினை நோக்கி அதிரடியாக ஆடிக் கொண்டு இருந்த மிட்ஷெல் மார்ஸ் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் 47 ரன்கள் சேர்த்த நிலையில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறியுள்ளார். 

ஸ்மித் டக் அவுட்..!

பாண்டயா பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். 

விக்கெட்..!

11வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ட்ராவிஸ் ஹெட் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்து 33 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறியுள்ளார்.  

Ind vs Aus 3rd ODI Live: விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை தொட்ட ஆஸ்திரேலியா.. திணறும் இந்திய பந்துவீச்சாளர்கள்!

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 9 ஓவர்கள் முடிவில் 60 ரன்கள் எடுத்துள்ளது. 

Ind vs Aus 3rd ODI Live: ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம் - 4 ஓவர்களில் 28 ரன்கள்

சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்யும் ஆஸ்திரேலிய அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு..! பவுலிங்கில் மிரட்டுமா இந்தியா?

சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக கூறியுள்ளார். 

Background

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை உறுதி செய்யும், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 01.30 மணியளவில் தொடங்க உள்ள இப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டியின் நேரலையை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஹாட் ஸ்டார் செயலியிலும் நேரடியாக கண்டுகளிக்கலாம்.


ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்:


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. அதைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.  வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து ஆந்திராவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், வேகப்பந்து வீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வாகை சூடியது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலை வகிக்கிறது.


தொடரை வெல்லப்போவது யார்?


இந்நிலையில் தொடரை வெல்லப்போவது யார் என்பதை உறுதி செய்யும் 3வது மற்றும் தொடரின் கடைசி ஒருநாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.


இந்திய அணி நிலவரம்:


ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மிட்செல் ஸ்டார்க்கின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. கடந்த போட்டியில் இந்திய அணி வெறும் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கத்து. தொடரை வெல்ல கோலி, ரோகித், பாண்ட்யா, ராகுல் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள், இன்றைய போட்டியில் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியம். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் சூர்யகுமாருக்கு பதிலாக, இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சனை களமிறக்கவும் வாய்ப்புள்ளது. பந்துவீச்சிலும் கடந்த போட்டியை போன்று இல்லாமல், ஷமி, சிராஜ், பாண்ட்யா ஆகியோர் கட்டுக்கோப்புடன் செயல்பட வேண்டியது வெற்றிக்கு அவசியமாக உள்ளது.


ஆஸ்திரேலிய அணி:


டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதோடு, ஸ்மித், லபுசக்னே, ஸ்டோய்னிஸ் போன்ற வலுவான வீரர்களையும் கொண்டுள்ளது. அதோடு, ஸ்டார்க், சீன் அப்பாட் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை தந்து வருகின்றனர். இதனால், இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


நேருக்கு நேர்:


இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஒரு நாள் போட்டிகளில்  இதுவரை 145 முறை நேருக்கு நேர்மோதியுள்ளன. இதில் 81-ல் ஆஸ்திரேலியாவும், 54-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டத்தில் முடிவில்லை.


4 ஆண்டுகளுக்குப் பின்...


இதனிடையே, சென்னை சேப்பாக்கத்தில் 4 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச போட்டி நடைபெறுகிறது. முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கியது. அந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, நான்கு ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் நடைபெறும் போட்டியை நேரில் காண, தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 


இந்திய உத்தேச அணி:


சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் அல்லது சஞ்சு சாம்சன், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா , ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது சிராஜ், முகமது ஷமி அல்லது உம்ரான் மாலிக் 


ஆஸ்திரேலிய உத்தேச அணி:


டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), மார்னஸ் லபுசக்னே, மிட்செல் மார்ஷ் அல்லது மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, சீன் அப்போட் அல்லது நாதன் எலிஸ்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.