ஆஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்கும் இடையே நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியும் 3 நாட்களிலே முடிவுக்கு வந்துள்ளது. நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முழுவதும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும், 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியிருந்தது. ஆனாலும், வெற்றி பெற வேண்டிய போட்டியை கோட்டைவிட்டு இனி தொடரை வெல்லும் வாய்ப்பையும் பறிகொடுத்து அமர்ந்துள்ளது ஆஸ்திரேலியா.


வெற்றியை கோட்டைவிட்ட ஆஸ்திரேலியா:


ஆஸ்திரேலிய அணியின் இந்த பரிதாப நிலைக்கு காரணம் யார் என்றால் அது நமது ஜடேஜாதான். இந்த மைதானத்தில் வெற்றி பெற முதலில் பேட் செய்வது முக்கியம் என்று ஏற்கனவே மைதான அறிக்கை வெளியான நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஆட்டத்தை தொடங்கியது. முதல் இன்னிங்சில் 263 ரன்களை ஆஸ்திரேலிய அணி குவித்த நிலையில், இந்தியா முதல் இன்னிங்சில் 262 ரன்களை எடுத்துது. ஒரு ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே 64 ரன்களை எடுத்திருந்தது.




இந்த நிலையில், 2வது இன்னிங்சில் 250 ரன்களுக்கு மேல் எடுத்தாலே ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு 250 ரன்களுக்கு மேல் நிர்ணயிக்கலாம், இந்திய அணியை வீழ்த்தலாம் என்று  கணித்திருந்தனர். அதற்கான வாய்ப்புகளும் அவர்களுக்கு சாதகமாகவே இருந்தது. மைதானம் சுழலுக்கு சாதகமாக இருப்பதை நன்று அறிந்து கொண்ட இந்திய கேப்டன் ரோகித்சர்மா அஸ்வின், ஜடேஜா மூலம் சுழல் தாக்குதலை நடத்தினர்.


மிரட்டிய ஜடேஜா:


அவரது முயற்சிக்கு கை மேல் பலன் கிட்டியது. ஆட்டம் தொடங்கியவுடன் ட்ராவிஸ் ஹெட் 43 ரன்களில் அஸ்வின் சுழலில் சிக்க, லபுசேனே 35 ரன்களில் அவுட்டானார். கடந்த இன்னிங்சில் அசத்திய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்சை ஜடேஜா டக் அவுட்டாக்க, ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கோல்டன் டக் அவுட்டாக்கினர். அடுத்து வந்த நாதன் லயன் 8 ரன்களிலும், குகென்மனை டக் அவுட்டாக்கியும் ஜடேஜா அசத்தினார்.


இரண்டாவது இன்னிங்சை ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை சீட்டுக்கட்டு போல தனது சுழலால்  ஆஸ்திரேலியா அணியின் விக்கெட்டுகளை சீட்டுக்கட்டு போல சறுக்கினார். இதனால், ஆஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இந்திய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்கலாம் என்ற எண்ணத்தை ஜடேஜா தூள் தூளாக்கினார்.




அசத்திய அக்‌ஷர்:


முன்னதாக, இந்திய அணி முதல் இன்னிங்சில் 139 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இந்திய அணியை 150 ரன்களுக்குள் சுருட்டிவிடலாம் என்ற ஆஸ்திரேலிய எண்ணத்தை அக்‌ஷர் படேல் தவிடுபொடியாக்கினார். யாருமே எதிர்பாராத வகையில் அஸ்வினுடன் கூட்டணி அமைத்த அக்‌ஷர் படேல் ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்தார். இந்த கூட்டணி மட்டும் 8வது விக்கெட்டுக்கு 113 ரன்களை குவித்தது. அஸ்வின் 37 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்த அக்‌ஷர் படேல் 115 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 74 ரன்களை விளாசினார்.


வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிக்கையுடன் இருந்த ஆஸ்திரேலிய அணியை இந்த போட்டியில் வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைக்க முழுக்காரணம் அக்‌ஷர் படேலும், ரவீந்திர ஜடேஜாவும்தான் என்பது தவிர்க்க முடியாத உண்மை.


மேலும் படிக்க: Watch Video: அவுட்டா? இல்லையா? சர்ச்சைக்குள்ளான விராட் கோலி விக்கெட்! நடுவரை விளாசும் ரசிகர்கள்!


மேலும் படிக்க: Virat Kohli Records: 'கிங்' கோலிடா..! அதிவேக 25 ஆயிரம் ரன்கள்..! புதிய வரலாறு படைத்த ரன்மெஷின் விராட்...!