இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 ரன் முன்னிலை வகிக்கிறது.  2வது டெஸ்ட் போட்டியின்  முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 1 ரன் முன்னிலை வகிக்கிறது. 


டபுள் 'A' கூட்டணி


முதல் இன்னிங்ஸில் ஒரு கட்டத்தில் இந்திய அணி 139 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைன் இழந்து மிக மோசமான நிலையில் இருந்தது. அதன் பின்னர் கூட்டணி சேர்ந்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அக்‌ஷர் பட்டேல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூட்டணி இந்திய அணியை சரிவில் இருந்து மெல்ல மெல்ல மீட்டது. சிறப்பாக விளையாடி வந்த இருவரும் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி வந்தனர். 


அணியின் ஸ்கோர் 253 ஆக இருந்த போது அஸ்வின் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அஸ்வின் 71 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன் பின்னர் அணியின் ஸ்கோர் 259ஆக இருந்த போது அக்‌ஷரும் 74 ரன்னில் அவுட் ஆனார். அதன் பின்னர் இந்திய அணி ஆல்- அவுட் ஆக, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்கள் சேர்த்து 1 ரன் பின் தங்கியுள்ளது. 


ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்த வரையில் நாதன் லையன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்கு எதிராக 100 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரராகியுள்ளார்.