IND Vs AUS 2nd T20: திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.


இந்தியா - ஆஸ்திரேலியா டி-20 தொடர்:


கடந்த வாரத்தில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, தற்போது இந்தியா உடன் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளயாடி வருகிறது. மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் பிசிசிஐ வாய்ப்பளித்துள்ளது.  அதேபோல் ஆஸ்திரேலியா தரப்பிலும் அதிகப்படியாக இளம் வீரர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் 209 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை அதிரடியாக எட்டிய இந்திய அணி, 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி-20 போட்டி தொடங்கியுள்ளது. 


டாஸ் வென்ற ஆஸ்திரேலியா 


அதன்படி, திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த  போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இதன் நேரலையை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இந்த போட்டியில் வென்று தொடரில் மேலும் முன்னிலை பெற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தீவிரம் காட்டுகிறது. அதேநேரம், தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்ய ஆஸ்திரேலியாவும் மல்லுக்கட்டுகிறது. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவுக்கு இருக்கும் ப்ளஸ்


ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் வாய்ந்த இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். உள்ளூர் மைதானங்களில் போட்டி நடைபெறுவது இந்திய அணி வீரர்களுக்கு கூடுதல் சாதகமாக உள்ளது. பேட்டிங்கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இந்திய வீரர்கள் பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இல்லை என்றால் டி 20 தொடரையும் தாரை வார்க்க வேண்டி வரும்.  உலகக் கோப்பையில் விளையாடிய அணியை பெரிய மாற்றம் எதுவும் இன்றி ஆஸ்திரேலிய அணி அப்படியே களமிறக்கியுள்ளது. முதல் போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட மேக்ஸ்வெல், ஜாம்பா டிராவிஸ் ஹெட் ஆகியோர் இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் அணிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


இரு அணிகள் விபரம்


 


இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ்(கேட்ச்), திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா


ஆஸ்திரேலியா ப்ளேயிங் லெவன்: ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட்(கேப்டன்/ விக்கெட் கீப்பர்), சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, தன்வீர் சங்கா