IND vs AUS 2nd ODI LIVE: ஆஸ்திரேலியாவை தட்டித் தூக்கி தொடரை வென்ற இந்திய இளம்படை
IND vs AUS 2nd ODI LIVE Score Updates: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி குறித்த தகவல்களை உடனுக்குடன் காணலாம்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 28.2ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ஜடேஜா மற்றும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இந்திய பந்து வீச்சினை துவம்சம் செய்து வரும் அபோட் 29 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி 26.4 ஓவர்களில் 8 விக்கெட்டினை இழந்து 205 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி தனது 8வது விக்கெட்டினை இழந்து தத்தளித்துக்கொண்டு உள்ளது.
ஆஸ்திரேலிய அணி தனது 7வது விக்கெட்டினை ரன் - அவுட் முறையில் கீரீன் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
போட்டியின் 19வது ஓவரின் 2வது பந்தில் ஆஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரி தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
போட்டியின் 13வது மற்றும் 15வது ஓவரை வீசிய அஸ்வின் 13வது ஓவரில் லபுசேனையும், 15வது ஓவரில் வார்னர் மற்றும் ஜாஷ் இங்லிஸ் ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற ஆஸ்திரேலிய அணிக்கு 33 ஓவர்களில் 317 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மழை நின்று போட்டியை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால், களத்தில் வீரர்கள் பயிற்சி செய்து வருகின்றனர்.
மழை குறுக்கிட்டதால் போட்டியின் ஓவர்கள் குறைக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட்டால் 20 ஓவர்களில் 230 ரன்கள் எடுக்க வேண்டும். அப்படி முடிவு செய்யப்பட்டால் ஆஸ்திரேலிய அணிக்கு 11 ஓவர்களில் 174 ரன்கள் தேவை.
ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 41 ஓவர்களில் 344 ரன்கள் தேவை எனும் நிலையில் களமிறங்கவுள்ளது. கைவசம் இன்னும் 8 விக்கெட்டுகள் உள்ளது.
9 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் குறுக்கிட்ட மழை நின்று விட்டதால் போட்டி மீண்டும் தொடங்குவதற்கு நடுவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
56 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா ஆடி வரும் நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் பிராசாத் கிருஷ்ணா ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான மேத்யூ ஷார்ட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரது விக்கெட்டினை போட்டியின் இரண்டாவது ஓவரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தில் வீழ்த்தினார்.
ஆஸ்திரேலிய அணி தனது இன்னிங்ஸினை பவுண்டரியுடன் தொடங்கியுள்ளது.
400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸை வாரனர் மற்றும் மேத்யூவ் களமிறங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளனர்.
அதிரடியாக பவுண்டரிகளும் சிக்ஸர்களும் விளாசி வரும் சூர்யகுமார் யாதவ் 24 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.
இந்திய அணி தனது அதிரடியான ரன் குவிப்பால் 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 362 ரன்கள் சேர்த்துள்ளது.
அரைசதம் கடந்த கேப்டன் கே.எல். ராகுல் தனது விக்கெட்டினை 52 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் சிறப்பான முறையில் 35 பந்தில் 50 ரன்கள் சேர்த்துள்ளார்.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்ய குமார் யாதவ் க்ரீன் வீசிய 44வது ஓவரில் முதல் 4 பந்தில் 4 சிக்ஸர் விளாசி மிரட்டியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.
அதிரடியாக ஆடி வந்த இஷன் கிஷன் தனது விக்கெட்டினை 41வது ஓவரின் 2வது பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார்.
அதிரடியாக ஆடி வரும் இந்திய அணி 40.1 ஓவரில் 303 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் 18 பந்தில் 3 சிக்ஸர்கள் விளாசி மிரட்டியுள்ளார்.
இந்திய அணி 35.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் சேர்த்துள்ளது.
சதம் விளாசி இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு செல்ல உறுதுணையாக இருந்த சுப்மன் கில் தனது விக்கெட்டினை 104 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
சிறப்பாக விளையாடி சதம் விளாசிய ஸ்ரேயஸ் ஐயர் தனது விக்கெட்டினை 105 ரன்கள் சேர்த்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் அபேட் பந்துவீச்சில் இழந்து வெளியேறினார்.
சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயஸ் ஐயர் 86 பந்தில் தனது சதத்தினை எட்டியுள்ளார்.
இந்திய அணியின் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் கூட்டணி 153 பந்தில் 186 ரன்கள் குவித்து இந்திய அணியை 200 ரன்களைக் கடக்க உதவியுள்ளனர்.
29வது ஓவரில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 202 ரன்கள் சேர்த்துள்ளது.
26 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 190 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி இதுவரை 15 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் பறக்கவிட்டுள்ளது.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 158 ரன்கள் சேர்த்துள்ளது
போட்டியின் 20வது ஓவரினை ஆஸ்திரேலிய அணியின் 6வது பந்துவீச்சாளர் மேத்யூ ஷார்ட் வீசினார்.
போட்டியின் 19வது ஓவரினை வீசிய ஆடம் ஜம்பா ஓவரின் கடைசி இரண்டு பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசியுள்ளார்.
காயத்தில் இருந்து மீண்டு இந்திய அணிக்கு வந்துள்ள ஸ்ரேயஸ் ஐயரின் அரைசதம் இந்திய அணிக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.
களமிறங்கியது முதல் அதிரடியாக ஆடிக்கொண்டு வரும் ஸ்ரேயஸ் ஐயர் 41 பந்தில் 53 ரன்கள் குவித்து சிறப்பாக ஆடிக்கொண்டு உள்ளார்.
இந்திய அணி 15.3 ஓவர்கள் முடிவில் 7.74 என்ற வலுவான ரன் - ரேட்டில் ரன்கள் சேர்த்து வருகிறது.
15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 117 ரன்கள் சேர்த்துள்ளது.
2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நீல கலர் ஜெர்ஸியும், ஆஸ்திரேலிய அணியின் மஞ்சள் கலர் ஜெர்ஸியும் ஐபிஎல் தொடரில் சென்னை - மும்பை அணிகள் மோதுவதைப் போல இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் அந்த அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுகிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 2வது ஒருநாள் போட்டி மழையால் பாதிப்பு - தொடர்ச்சியாக மழை பெய்ததால் மைதானம் முழுவதும் மூடப்பட்டது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 32 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 34 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
Background
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி, இந்தூர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா:
அடுத்த மாதம் தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இரண்டாவது போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 01.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்போர்ட்18 அலைவரிசயிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.
எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் போட்டி:
தொடரில் ஏற்கனவே 1-0 என முன்னிலை வகிக்கும் இந்தியா, இன்றைய போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. அதோடு, ஐசிசியின் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியா, அதனை மேலும் வலுவாக பற்றிக்கொள்ள ஆர்வம் காட்டுகிறது. அதேநேரம், 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா இன்றைய போட்டியில் வென்று தொடரில் நீடிக்க தீவிரம் காட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.
இந்திய அணியின் நிலவரம்:
உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ரோகித், கோலி போன்ற வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால், கே.எல். ராகுல் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். முதல் போட்டியில் ஷமியின் அபார பந்து வீச்சும், அவருக்கு உறுதுணையாக பும்ரா, ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோர் செயல்பட்ட விதமும் பவுலிங் யூனிட்டிற்கு நம்பிக்கை அளிக்கிறது. பேட்டிங்கிலும் கில், கெய்க்வாட், கே.எல். ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் என அனைத்து டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களும் பொறுப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்று தந்தனர். அதேபோன்று இன்றைய போட்டியிலும் செயல்பட்டால், இந்திய அணி வெற்றி பெறுவது உறுதி.
ஆஸ்திரேலிய அணி நிலவரம்:
இதனிடையே, தென்னாப்ரிக்கா சுற்றுப்பயணத்தில் முதல் இரண்டு போட்டிகளில் வென்றாலும், அடுத்தடுத்து 3 போட்டிகளில் தோல்வியுற்று ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை இழந்தது. அதோடு, இந்திய பயணத்திலும் தனது முதல் போட்டியில் தோல்வி கண்டுள்ளது. இதனால், இன்றைய போட்டியில் வென்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா தீவிரம் காட்டும். வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள கேப்டன் கம்மின்ஸ் மற்றும் ஸ்மித் ஆகியோர் ஃபார்முக்கு திரும்பினால், இந்திய அணியின் வெற்றியை அவர்கள் தட்டி பறிக்க வாய்ப்புள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -