ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியின் மீதானான அதிருப்தியையும் அறிவுரைகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். 


விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 11 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. 


ஒருநாள் போட்டியான இந்த போட்டி மொத்தமே 37 ஒவர்களில் முடிந்து விட்டது. இதனைச் சுட்டிக்காட்டிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் விரேந்திர ஷேவாக் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, இது என்ன 20 ஓவர் மேட்ச்சா? மொத்த போட்டியே 37 ஓவர்களில் முடிந்து விட்டது. இதிலிருந்து இந்திய அணி விரைவில் வெளியேற வேண்டும். இந்திய அணி ஸ்விங் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.




ஷேவாக்கின் இந்த டிவிட்டர் பதிவுக்கு கீழ் Anwar muhammadi என்பவர் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதில் அவர், நான் 2000 ஆம் ஆண்டில் இருந்து கிரிக்கெட் பார்த்து வருகிறேன். அன்றில் இருந்து தற்போது வரை இந்திய அணி ஏன் இடது கை பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள தடுமாறி வருகிறது. இது மிகவும் மோசமான விஷயம். இன்னும் இந்திய அணி தனது பலவீனத்தினை கண்டு பிடிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். 


இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 


இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்காக இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (மார்ச் 19) மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 117 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆனது. இதன் பின்னர் களமிறங்கிய  ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ஆடியது, தொடக்க ஆட்டக்காரர்களான டேவிஸ் ஹெட் மற்றும் மிட்ஷெல் அதிரடியாக ஆடினர். மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் விளாச்சிய வண்ணம் இருந்தனர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா தனது அணியில் இருந்த பந்து வீச்சாளர்களில் ஐந்து பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார். ஆனால், சிறந்த பார்மில் இருந்த மிட்ஷெல்  மார்ஷ் மற்றும் டேவிஸ் ஹெட் இருவரும் தங்களது அதிரடியை குறைக்க வில்லை. 


இறுதியில், 11 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேவிஸ் ஹெட் 51 ரன்களும், மிட்ஷெல் மார்ஸ் 66 ரன்களும் எடுத்து இருந்தனர்.  


மேலும் படிக்க., 


IND vs AUS, 2nd ODI: மோசமான பேட்டிங்; ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பதிவான இந்தியாவின் மிகக் குறைந்த ஸ்கோர்..!