IND vs AUS 1st Test : 400 ரன்கள் குவித்து ஆல் அவுட்டான இந்திய அணி.. 7 விக்கெட்களை கழட்டிய டர்பி.. 223 ரன்கள் முன்னிலை..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 400 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல்-அவுட் ஆனது.

Continues below advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 400 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 120, அக்சர் பட்டேல் 84, ரவீந்திர ஜடேஜா 70 ரன் எடுத்திருந்தனர். 

Continues below advertisement

இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 223 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

இரண்டாவது நாள் ஆட்டம்:

இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மர்பி சுழலில் சிக்கி, அஸ்வின், புஜாரா மற்றும்  விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதேநேரம், மறுமுனையில் ரோகித் சர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது பவுண்டரிகளையும் விளாசினார். இதன் மூலம், ரோகித் சர்மா 171 பந்துகளில் டெஸ்ட் போட்டிகளில் தனது 9வது சதத்தை பூர்த்தி செய்தார். இதில் 14 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். இவரும் 212 பந்துகளில் 120 ரன்கள் எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 

அதன் பின்னர் ஸ்ரீகர் பரத் களமிறங்க, அவரும் மர்ஃபி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் தனது அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையை மார்ஃபி படைத்தார். மேலும், இந்திய அணிக்கு எதிரான போட்டியில்  அறிமுகமாகி, அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சிறப்பையும் மர்ஃபி பெற்றுள்ளார். 

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அக்‌ஷர் பட்டேல், ஏற்கனவே களத்தில் நிதானமாக ஆடிக் கொண்டு இருந்த ஜடேஜாவுடன் கை கோர்த்தார். இருவரும் தொடர்ந்து நிதானமாக ஆடிவந்தாலும், அவ்வப்போது தவறான ஷாட்டுகளை அடித்தனர். இதனால் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரும் இந்த வாய்ப்பினை மிகவும் சரியாக பயன்படுத்தி அரைசதம் கடந்தனர். 

மூன்றாம் நாள்:

மூன்றாம் நாள் தொடக்கத்தில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா, 185 பந்துகள் விளையாடி 70 ரன்கள் எடுத்து டாட் மர்பி வீசிய 119 ஓவரில் க்ளீன் போல்டானார். தொடர்ந்து, டாட் மர்பி வீசிய 131 வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு அக்ஸர் பட்டேல் கலக்கினார். அவருக்கு உறுதுணையாக முகமது ஷமியும் அவ்வபோது சிக்ஸர்களை தெறிக்கவிட்டார். 

அதிரடியாக விளையாடிய முகமது ஷமி 47 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து டர்பி பந்துவீச்சில் அலெக்ஸ் கேரியிடம் கேட்சானார். தொடர்ச்சியாக, சிக்ஸர்கள், பவுண்டரிகளி வெளுத்து வாங்கிய அக்ஸர் படேல் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாட் கம்மின்ஸ் வீசிய 140 வது ஓவரில் 84 ரன்களில் அவுட் ஆனார். இதன் மூலம் இந்திய அணியும் 400 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியை விட 223 ரன்கள் முன்னிலை வகித்துள்ளது. 

ஆஸ்திரேலியா அணி சார்பில் டர்பி ஏழு விக்கெட்களும், பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்களும், லயன் ஒரு விக்கெட்களும் எடுத்திருந்தனர். 

Continues below advertisement