IND vs AUS 1st ODI LIVE Score: 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.. கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய கே.எல்.ராகுல்..!

IND vs AUS 1st ODI LIVE Score Updates: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியின் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள ஏபிபி நாடு பக்கத்தில் இணைந்திருங்கள்.

ABP NADU Last Updated: 22 Sep 2023 10:02 PM
IND vs AUS 1st ODI LIVE Score: மூன்றுவகைக் கிரிக்கெட்டிலும் இந்தியாதான் டாப்..!

இந்த வெற்றியின் மூலம் ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதல் இடம் பிடித்துள்ளது. ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதால், தற்போது மூன்று வகைக் கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது.  

5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.. கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய கே.எல்.ராகுல்..!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

IND vs AUS 1st ODI LIVE Score: சூர்யகுமார் யாதவ் அரைசதம்..!

பொறுப்புடன் ஆடிவந்த சூர்ய குமார் யாதவ் 47 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார். 

வெற்றி இலக்கை நெருங்கும் இந்தியா; நெருக்கடி கொடுக்கும் ஆஸ்திரேலியா..!

இந்திய அணி 35 ஓவர்களில் 4 விக்கெட்டினை இழந்து 200 ரன்களை கடந்துள்ளது. 

IND vs AUS 1st ODI LIVE Score: இஷான் கிஷன் அவுட்..!

நிதானமாக ஆடி வந்த இஷான் கிஷன் தனது விக்கெட்டினை 18 ரன்கள் சேர்த்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார். 

IND vs AUS 1st ODI LIVE Score: இந்தியா வெற்றி பெற 99 ரன்கள் தேவை..!

இந்திய அணி வெற்றி இலக்கான 277 ரன்களை எட்ட இன்னும் 99 ரன்கள் தேவை, மேலும் இந்திய அணி தரப்பில் இன்னும் 7 விக்கெட்டுகள் கைவசம் உள்ளது. 

IND vs AUS 1st ODI LIVE Score: 9 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்தியா..!

142 ரன்கள் இருந்தபோது தனது முதல் விக்கெட்டினை இழந்த இந்திய அணி 148வது ரன்னில் இரண்டாவது விக்கெட்டினையும், 151வது ரன்னில் மூன்றாவது விக்கெட்டினையும் இழந்துள்ளது. 

IND vs AUS 1st ODI LIVE Score: இந்தியாவுக்கு ஷாக் - கில் அவுட்..!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 74 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை ஆடம் ஜம்பா பந்து வீச்சில் இழந்து வெளியேறினார். 

IND vs AUS 1st ODI LIVE Score: 150 ரன்களை எட்டிய இந்தியா..!

இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும் சிறப்பாக ஆடி வரும் இந்திய அணி 25 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AUS 1st ODI LIVE Score: அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த இந்தியா..!

இந்திய அணியின் தனது முதல் விக்கெட்டினை 142 ரன்னிலும், இரண்டு விக்கெட்டினை 148 ரன்னிலும் இழந்தது. 

சுப்மன்கில், ருதுராஜ் அடுத்தடுத்து அரைசதம்.. தடுமாறும் ஆஸ்திரேலிய பவுலர்கள்..!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடி வரும் இந்திய அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் 50 ரன்களை கடந்து ஆடி வருகிறார்.

IND vs AUS 1st ODI LIVE Score: 100 ரன்களை எட்டிய இந்தியா..!

இந்திய அணி தனது 100 ரன்களை 16வது ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி எட்டியுள்ளது. 

37 பந்துகளில் அரைசதம்.. சுப்மன்கில் அபாரம்..!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக ஆடும் சுப்மன்கில் 37 பந்துகளில் அபாரமாக ஆடி அரைசதம் விளாசியுள்ளார்.

IND vs AUS 1st ODI LIVE Score: மிரட்டும் தொடக்க ஜோடி..!

இந்திய அணியின் இளம் தொடக்க ஜோடியான சுப்மன் கில் மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலிய பந்து வீச்சினை திறம்பட எதிர்கொண்டு வருகின்றனர். 

IND vs AUS 1st ODI LIVE Score: பவர்ப்ளே முடிவில் இந்தியா..!

முதல் 10 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AUS 1st ODI LIVE Score: 50 ரன்களைக் கடந்த இந்தியா..!

இந்திய அணி 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AUS 1st ODI LIVE Score: கேட்ச் மிஸ்..!

சுப்மன் கில்லின் கேட்சை ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் இங்லிஸ் தவறவிட்டார். 

IND vs AUS 1st ODI LIVE Score: இந்தியாவுக்கு முதல் சிக்ஸர்..!

இந்திய அணியின் முதல் சிக்ஸரை தொடக்க வீரர் சுப்மன் கில் அடித்துள்ளார். 

IND vs AUS 1st ODI LIVE Score: மைதானத்தில் குவியும் ரசிகர்கள்..!

277 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியுள்ளதால் மைதானத்திற்கு ரசிகர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். 

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா; வெற்றியை எட்டுமா? 277 ரன்கள் இலக்கு..!

இந்திய அணியின் சார்பில் ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் இந்திய அணியின் இன்னிங்ஸை தொடங்கினர். 

IND vs AUS 1st ODI LIVE Score: களமிறங்கியது இந்தியா..!

இந்திய அணி 277 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது. 

இந்தியாவுக்கு 277 ரன்கள் இலக்கு; 5 விக்கெட்டுகள் கைப்பற்றி ஷமி அசத்தல்

50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய் அணியின் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். 

பந்துவீச்சில் மிரட்டும் இந்தியா.. வலுவான இலக்கை நிர்ணயிக்க ஆஸ்திரேலியா போராட்டம்..!

இந்திய அணியின் அபார பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களை எடுத்துள்ளது.

IND vs AUS 1st ODI LIVE Score: 40 ஓவர்களில் ஆஸி..!

40 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AUS 1st ODI LIVE Score: கேமரூன் க்ரீன் அவுட்..!

ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேமரூன் க்ரீன் தனது விக்கெட்டை ரன் அவுட் முறையில் இழந்து வெளியேறினார். 

IND vs AUS 1st ODI LIVE Score: களமிறங்கிய வீரர்கள்..!

மழைக்குப் பின்னர் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது. 

IND vs AUS 1st ODI LIVE Score: மழையால் தடைபட்ட ஆட்டம்; ரசிகர்கள் ஏமாற்றம்

ஆஸ்திரேலிய அணி 35.4 ஓவர்களில் பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி மழையால் தடைபட்டுள்ளது. 

IND vs AUS 1st ODI LIVE Score: லபுசேனே அவுட்..!

49 பந்தில் 39 ரன்கள் சேர்த்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் லபுசேனே அஸ்வின் பந்து வீச்சில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

IND vs AUS 1st ODI LIVE Score: தடுமாறும் அஸ்திரேலியா..!

ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்களுக்குப் பின்னரும் மிகவும் நிதானமாகவே ஆடி வருவதால் மைதானத்தில் குழுமியிருக்கும் ரசிகர்கள் மிகவும் ஆர்வமில்லாமல் காணப்படுகின்றனர். 

IND vs AUS 1st ODI LIVE Score: சுழன்று அடிக்கும் காற்று..!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வரும் மொகாலியின் பிந்ரா மைதானத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. 

IND vs AUS 1st ODI LIVE Score: 150 ரன்களை எட்டிய ஆஸி..!

30 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AUS 1st ODI LIVE Score: 25வது ஓவரில் ஆஸ்திரேலியா..!

3 விக்கெட்டுகளை இழந்து நிதானமாகவே ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி 25 ஓவர்கள் முடிவில் 126 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AUS 1st ODI LIVE Score: ஸ்மித் போல்ட்..!

ஆஸ்திரேலிய அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன் ஸ்மித்தின் விக்கெட்டை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகியுள்ளார். 

IND vs AUS 1st ODI LIVE Score: 100 ரன்களை எட்டிய ஆஸ்திரேலியா..!

2 விக்கெட்டுகளை இழந்து நிதானமாக ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 101 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AUS 1st ODI LIVE Score: வார்னர் அவுட்..!

அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடி வந்த வார்னர் 53 பந்தில் 52 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை ஜடேஜா பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.

IND vs AUS 1st ODI LIVE Score: 15 ஓவர்கள் முடிவில் ஆஸி..,

15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை இழந்து 78 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AUS 1st ODI LIVE Score: 50 ரன்களை எட்டிய ஆஸ்திரேலியா..!

11.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட்டை இழந்து 50 ரன்களை எட்டியுள்ளது. 

IND vs AUS 1st ODI LIVE Score: பவர்ப்ளேவில் ஆஸ்திரேலியா நிதானம்..!

பவர்ப்ளேவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை இழந்து 42 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AUS 1st ODI LIVE Score: 6 ஓவர்களில் 26 ரன்கள்.. 1 விக்கெட்டைஇழந்து விளையாடும் ஆஸ்திரேலியா..!

ஆஸ்திரேலியா 6 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை கைப்பற்றி 15 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். ஜஸ்பிரித் பும்ரா 3 ஓவர்களில் 2 மெய்டன்களை வீசி 7 ரன்கள் கொடுத்துள்ளார். ஸ்மித் 12 ரன்களுடனும், வார்னர் 6 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

IND vs AUS 1st ODI LIVE Score: 4 ரன்களில் நடையைக்கட்டிய மிட்செல் மார்ஷ்.. விக்கெட்டை வேட்டையாடிய ஷமி..!

முகமது ஷமி வீசிய முதல் ஓவரிலேயே மிட்செல் மார்ஷ் 4 ரன்கள் எடுத்து சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

IND vs AUS 1st ODI LIVE Score: இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும் போட்டி..!

மொஹாலியில் நடைபெற உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி தொடங்க இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே உள்ளன.

IND vs AUS 1st ODI LIVE Score: முதலில் பேட் செய்யும் ஆஸ்திரேலியா.. பந்துவீச்சால் அசத்துமா இந்தியா..?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொஹாலி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

IND vs AUS 1st ODI LIVE Score: இன்று இந்தியாவிற்கு எதிராக களமிறங்கும் ஆஸ்திரேலியா ப்ளேயிங் 11..!

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ ஷார்ட், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், ஆடம் ஜாம்பா

IND vs AUS 1st ODI LIVE Score: இன்று களமிறங்கும் இந்திய ப்ளேயிங் 11..!

சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.

Background

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான தொடர் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்தநிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொஹாலியில் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியானது இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு வருகின்ற உலகக்கோப்பை போட்டியை கணக்கில் கொண்டு முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விராட் கோலி, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களும் ஓய்வில் இருக்கின்றன. இப்படியான சூழலில் முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் விளையாடும் 11 பேர் யாராக இருக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.


இந்திய அணியின் விளையாடும் 11 பேர் யார் யார்..? 


இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கலாம். இதற்குப் பிறகு, இஷான் கிஷன் நம்பர்-3 இல் பேட்டிங் செய்ய உள்ளே வருவார் என்றும், மிடில் ஆர்டரில் தற்காலிக கேப்டன் கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு வலு சேர்ப்பார்கள். ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டராக பின் வரிசையில் நம்பிக்கை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் விளையாடும் பதினொன்றில் தமிழ்நாடு வீரர் ரவிசந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அதேசமயம் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விளையாடும் பதினொன்றில் ஒரு பகுதியாக இருக்கலாம். இந்த நேரத்தில், முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் ப்ளேயிங் லெவனில் முகமது சிராஜ் அமரவைக்கப்படலாம். 


ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்களா..? 


இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் ரசிகர்களின் பார்வை ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் மீதுதான் இருக்கும். காயத்தினால் அவதிப்பட்டு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு திரும்பினார். ஆனால் அதிக போட்டியில் அவரால் விளையாட முடியவில்லை. அதே நேரத்தில், ரவி அஸ்வின் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்குப் பிறகு இந்திய ஒருநாள் அணிக்கு திரும்புகிறார். இந்திய அணியில் காயம் அடைந்த அக்சர் படேலுக்கு பதிலாக ரவிசந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடர் ரவிசந்திரன் அஸ்வினுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ரவிசந்திரன் அஸ்வினின் ஆட்டம் சிறப்பாக இருந்தால், வரும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறலாம் என நம்பப்படுகிறது.


ரோஹித் மற்றும் கோலிக்கு ஓய்வு ஏன்..?


ரோஹித் மற்றும் கோலிக்கு ஓய்வு ஏன் என்பது குறித்து ராகுல் டிராவிட் கூறுகையில், “வீரர்களிடம் பேசிய பிறகே ஓய்வு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வீரர்களும் உலகக் கோப்பைக்கு முன் முழு உடல் மற்றும் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்று அணி விரும்புகிறது.” என தெரிவித்தார். 


கணிக்கப்பட்ட இந்திய அணி:


ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், இஷான் கிஷன், கேஎல் ராகுல் (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.


கணிக்கப்பட்ட ஆஸ்திரேலியா அணி:


டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா மற்றும் தன்வீர் சங்கா.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.