இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதுவே இந்தியாவில் ஆஸ்திரேலியா எடுத்துள்ள மிகக்குறைந்த ஸ்கோர் ஆகும். ஆனால் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிராக இதைவிடவும் மிகக் குறைந்த ஸ்கோர் அடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பெர்த்தில் 1991ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆனால் இந்தியாவில் மிகக் குறைந்த ஸ்கோர் இன்று (17/03/2023) நடந்த போட்டியில் அடிக்கப்பட்ட 188 ரன்கள் தான்.
இன்று நடந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிஸ் ஹெட்டை முகமது சிராஜ் தனது சிறப்பான பந்து வீச்சினால் போல்ட் ஆக்கினார்.
5 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் விக்கெட்டினை இழந்தது அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸிமித் களமிறங்கினார்.
நிதானமாக ஆடிவந்த இந்த ஜோடியை இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பிரித்தார். இவரது பந்துவீச்சில் நிதானமாக அடிவந்த ஸ்மித் 30 பந்தில் 22 ரன்கள் சேர்த்த நிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அதன் பின்னர் அதிரடியாக ஆடிவந்த மிட்ஷெல் மார்ஸ் 65 பந்தில் 10 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி 81 ரன்கள் சேர்த்த நிலையில், ஜடேஜாவுன் சுழலில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின்னர், இந்திய பந்து வீச்சாளர்கள் நெருக்கடி மேல் நெருக்கடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.
இந்தியா vs ஆஸ்திரேலியா
இரு நாடுகளும் கடைசியாக 2020ஆம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரில் மோதின, அப்போது ஆஸி 2-1 என்ற கணக்கில் இந்திய அணியை வென்று தொடரைக் கைப்பற்றியது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 80-53 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளும் ஒரு நாள் போட்டிகளில் 143 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, ஆனால் அதில் 10 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் முடிவடைந்துள்ளது.
விளையாடிய போட்டிகள் - 143
ஆஸ்திரேலியா வென்ற போட்டிகள் - 80
இந்தியா வென்ற போட்டிகள் - 53
இந்திய மண்ணில் நடந்த போட்டிகளைப் பொறுத்தவரையில், ஆஸ்திரேலியா 30-29 என்ற அளவில் முன்னிலையில் உள்ளது. சொந்த மண்ணில் இந்தியாவை தோற்கடிக்க பெரும்பாலான நாடுகள் போராடி வருகின்றன, ஆனால் ஆஸ்திரேலியா இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிரான கடைசி ஆறு ஒருநாள் போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது.
விளையாடிய போட்டிகள் - 64
ஆஸ்திரேலியா வென்ற போட்டிகள் - 30
இந்தியா வென்ற போட்டிகள் - 29
முடிவு இல்லாத போட்டிகள் - 5
கடைசி ஐந்து போட்டிகள்
- ஜனவரி 19, 2020 அன்று IND (289/3) AUSஐ (286/9) 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
- ஜனவரி 17, 2020 அன்று IND (340/6) AUS (304) அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
- AUS (258/0) 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் IND (255) ஐ வென்றது, ஜனவரி 14, 2020.
- AUS (272/9) 35 ரன்கள் வித்தியாசத்தில் INDயை (237) வென்றது, மார்ச் 13, 2019.
- AUS (359/6) INDயை (358/9) 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது, மார்ச் 10, 2019.