அரைசதம் அடித்த ஷிவம் துபே:


அண்மையில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட  இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த நாட்டில் விளையாடி வருகிறது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று டி 20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.


முன்னதாக, முதல் டி 20 போட்டி கடந்த 11 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. 


பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் ஷிவம் துபே சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தார். அதன்படி கடைசி வரை களத்தில் நின்ற அவர் 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி 60 ரன்களை குவித்தார்.  அதேபோல், 2 ஓவர்கள் வீசி 9 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். 


ஆல் ரவுண்டர் பிரச்சனையை தீர்ப்பார்:


இந்நிலையில் இந்தியா தேடிக் கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் பிரச்சனையை நீண்ட காலத்துக்கு தீர்க்கக் கூடியவராக ஷிவம் துபே இருப்பார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.


இது தொடர்பாக பேசியுள்ள அவர், ஷிவம் துபேவிடம் இப்போது நான் பார்க்கும் மிகப்பெரிய மாற்றம் அவருடைய பந்து வீச்சின் வேகம் தான். அவருடைய வேகம் தற்போது நன்றாகவே முன்னேறியுள்ளது. அதே போல தன்னுடைய ஃபிட்னஸை உயர்த்தி இருக்கிறார். எனவே இந்தியா நீண்ட காலமாக தேடிக் கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக அவர் இருக்கலாம்.


ஒருவேளை இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளிலும் தொடர்ந்து நல்ல ரன்கள் அடிக்கும் பட்சத்தில் அவரை இனிமேலும் இந்திய அணி புறக்கணிப்பது கடினமாக இருக்கும்” என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங். இந்நிலையில் நாளை இந்தூரில் நடைபெறும் இரண்டாவது டி 20 போட்டியில் விளையாட இருக்கிறது இந்திய அணி. முன்னதாக இந்த போட்டியில் விராட் கோலி 14 மதங்களுக்கு பிறகு களம் இறங்க உள்ளதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Ishan Kishan: இஷான் கிஷன் விஷயத்தில் என்ன நடக்கிறது? ராகுல் ட்ராவிட் சொன்னது இதுதான்!


மேலும் படிக்க: Virat Kohli: விராட் கோலியை யார் என்று கேட்ட ரொனால்டோ! ரசிகர்கள் ஷாக்... வீடியோ உள்ளே!