IND vs AFG T20 World Cup 2024: சூப்பர் 8ல் மோதும் இந்தியா - ஆப்கானிஸ்தான்.. இதுவரை அதிக ரன்கள், அதிக விக்கெட்கள் யார் யார்?
டி20 உலகக் கோப்பையில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டிகளில் இதுவரை அதிக ரன்கள், விக்கெட்கள் உள்ளிட்ட பல்வேறு ரெக்கார்ட்களை பார்க்கலாம்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை் 2024 சூப்பர் 8ல் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது வருகின்ற வியாழக்கிழமை (ஜூன் 20) பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி 8 மணிக்கு நடைபெறுகிறது.
டி20 உலகக் கோப்பைகளில் ஆப்கானிஸ்தான் இந்திய அணியை வீழ்த்தியது இல்லை. இதுவரை இரு அணிகளும் மூன்று முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அந்த மூன்று போட்டியிலும் இந்திய அணி வெற்றியை பெற்று, 100 சதவீத வெற்றியை தன் வசம் வைத்துள்ளது. தற்போதைய ஃபார்மைப் பொறுத்தவரை, இந்திய கிரிக்கெட் அணி தங்கள் குரூப் ஏ பிரிவில் அனைத்து போட்டிகளிலும் விளையாடி வெற்றிபெற்றுள்ளது. அதேநேரத்தில், ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி 4 லீக் போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.
இந்தநிலையில், டி20 உலகக் கோப்பையில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டிகளில் இதுவரை அதிக ரன்கள், விக்கெட்கள் உள்ளிட்ட பல்வேறு ரெக்கார்ட்களை பார்க்கலாம்.
அதிக ரன்கள்:
- விராட் கோலி (இந்தியா) - 175 ரன்கள்
- ரோஹித் சர்மா (இந்தியா) - 150 ரன்கள்
- முகமது நபி (ஆப்கானிஸ்தான்) - 120 ரன்கள்.
அதிக விக்கெட்டுகள் :
- ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) - 7 விக்கெட்டுகள்
- முகமது நபி (ஆப்கானிஸ்தான்) - 6 விக்கெட்டுகள்
- புவனேஷ்வர் குமார் (இந்தியா) - 5 விக்கெட்டுகள்
சிறந்த பந்துவீச்சு: ரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா): 4/8 (2014)
அதிக தனிநபர் ஸ்கோர்: விராட் கோலி (இந்தியா): 89* (2021)
அதிக சிக்ஸர்கள்:
- ரோஹித் சர்மா (இந்தியா) - 8 சிக்ஸர்கள்
- முகமது நபி (ஆப்கானிஸ்தான்) - 6 சிக்ஸர்கள்
அதிக கேட்சுகள் :
- எம்.எஸ்.தோனி (இந்தியா) - 4 கேட்சுகள்
- முகமது நபி (ஆப்கானிஸ்தான்) -3 கேட்சுகள்
அதிகபட்ச ஸ்கோர்: 2021 உலகக் கோப்பையில் அபுதாபியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது.
குறைந்தபட்ச ஸ்கோர்: 2021 உலகக் கோப்பையில் கிராஸ் ஐலெட்டில் இந்தியா 20 ஓவரில் 115/8 ரன்களுக்குள் ஆப்கானிஸ்தான் அணியை சுருட்டியது.
அதிக இந்தியா vs ஆப்கானிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய வீரர்கள்: இதுவரை டி20 உலகக் கோப்பை இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த மூன்று போட்டிகளிலும் முகமது நபி மற்றும் முகமது ஷாஜாத் ஆகியோர் விளையாடியுள்ளனர். இருவரும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பையில் இந்தியா vs ஆப்கானிஸ்தான் போட்டியின் சுருக்கங்கள் இதுவரை :
- 2012 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
- 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
- 2021 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.