இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி டிராவில் முடிந்ததால் சூப்பர் ஓவர் முறையைக் கொண்டு போட்டியின் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார். முதல் சூப்பர் ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி 16 ரன்கள் குவிக்க, இந்திய அணி 17 ரன்களை நோக்கி களமிறங்கியது. இந்திய அணி சார்பில் கேப்டன் ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். முதல் பந்தில் ரோகித் ஒரு ரன் எடுக்க, இரண்டாவது பந்தில் ஜெய்ஸ்வால் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது மற்றும் நான்காவது பந்தினை ரோகித் சிக்ஸருக்கு விரட்ட 5வது பந்தில் பவுண்டரிக்கு விளாச முயன்றார். ஆனால் ஒருரன் மட்டுமே கிடைத்தது. தற்போது இந்திய அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது நான் - ஸ்ட்ரைக்கர் முனையில் நின்றுகொண்டு இருந்த ரோகித் தனது விக்கெட்டினை ரிடையர் - ஹட் செய்து வெளியேறினார். இது பார்வையாளர்களுக்கு மட்டும் இல்லாமல் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கும் அதிர்ச்சி அளித்தது. ஏற்கனவே 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்தது மட்டும் இல்லாமல் ஃபீல்டிங்கும் செய்துள்ளார் ரோகித். இதனால் கடும் சோர்வுக்கு உள்ளானார். கடைசி பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவை. ஜெய்ஸ்வால் பவுண்டரி விளாசினால் ஒரு பிரச்னையும் இல்லை. அதுவே ஓடி ரன்கள் எடுக்கவேண்டும் என்றால் ஆஃப்கான் வீரர்களின் டார்கெட் ரோகித் சர்மாவின் விக்கெட்டாகத்தான் இருக்கும்.
இதனால் நான் - ஸ்ட்ரைக்கர் திசையில் இருந்த ரோகித் சர்மா தனது விக்கெட்டினை ரிட்டையர்- ஹர்ட் செய்து வெளியேறினார். இது ஆஃப்கான் அணி வீரர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு பதிலாக ரிங்கு சிங் களமிறங்கினார். கடைசி பந்தில் இந்திய அணி ஒரு ரன் எடுத்ததால் போட்டி டிரா ஆனது. இதனால் இரண்டாவது சூப்பர் ஓவர் வீசப்பட்டது.
எனவே ரிட்டையர் ஹர்ட் செய்த ரோகித் சர்மா மீண்டும் களமிறங்கினார். இப்போது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கேள்வி ரிட்டையர் - ஹர்ட் செய்த ரோகித் சர்மா எப்படி களமிறங்கலாம் என்பதுதான். ஐசிசி விதிகளின்படி, ஒரு வீரர் சூப்பர் ஓவரில் தனது விக்கெட்டினை இழந்து விட்டால் அடுத்த சூப்பர் ஓவரில் அவரால் களமிறங்க முடியாது.
ரோகித் காயம் அடைந்தாரா அல்லது ஓய்வு பெற்றாரா என்பது குறித்து கள நடுவர்கள் தெளிவுபடுத்தாததால் சர்ச்சை எழுந்தது. ரோகித் 'ரிட்டையர்- ஹார்ட்' ஆக இருந்தால், அவர் "ரிடயர்ட் நாட் அவுட்" என்று கருதப்பட்டு மீண்டும் பேட்டிங் செய்ய தகுதியானவர். ஆனால், அவர் ரிட்டையர் அவுட் என்றால், இரண்டாவது முறையாக பேட்டிங் செய்ய அவர் தகுதி பெறமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் வெற்றிக்குப் பின்னர் பேசிய ரோகித் சர்மா, நான் மூன்று முறை பேட்டிங் செய்யும் வாய்ப்பினைப் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு முன்னர் ஒருமுறை ஐபிஎல் போட்டிகளில் இதுபோன்று மூன்று முறை பேட்டிங் செய்துள்ளேன். ஆனால் அது எப்போது எனத் தெரியவில்லை எனக் கூறினார்.