நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள ஏடன் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 7:30 மணிக்கு முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் தொடக்க வீரராக களமிறங்கிய வில் யங், டிம் ஷெய்பெர்ட் ஆகியோர் களமிறங்கினர்.

Continues below advertisement

185 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து

வில் யங் 9 ரன்களிலும், அடுத்து வந்த ஹென்ரி நிக்கோல்ஸ் 9 ரன்களில் வெளியேறினார். அடுத்து டிம் ஷெய்பெர்ட் - டேரில் மிட்செல் ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்தனர். அதாவது டிம் ஷெய்பெர்ட் 38, டேரில் மிட்செல் 28 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின் வரிசையில் வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதை அடுத்து நியூசிலாந்து அணி 40.2 ஓவரில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் 4, குர்னூர் பிரார் 3, அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ரோகித் டக் அவுட்

பின்னர் 186 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

Continues below advertisement

இந்தியா வெற்றி

அடுத்து சுப்மன் கில் - விராட் கோலி ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். இதனிடையே சிறிது நேரம் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. இதனால்  இந்தியாவுக்கு 32 ஓவரில் 143 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சிறப்பாக விளையாடிய 51 பந்துகளில் 74 ரன்களும், சுப்டன் கில் 37 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து சிறப்பாக பந்து வீசி மிரட்டிய ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.