நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரண்ட் போல்ட் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இவர் இந்த சாதனையை நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் இந்த சாதனையைப் படைத்துள்ளார். 


இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் மிக வேகமாக 200 விக்கெட்டுகளை எட்டிய மூன்றாவது வீரர் என்ற வரலாற்றை போல்ட் படைத்துள்ளார்.  நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்தின் 3வது லீக் போட்டி வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியின் போது இடது கை வேகப்பந்து வீச்சாளரான போல்ட் இந்த சாதனையை நிகழ்த்தினார். மோலும் போல்ட் இந்த சாதனையை 107 போட்டிகளில் படைத்துள்ளார். 


நியூசிலாந்து டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்த பின்னர், போட்டியின் 38 வது ஓவரில் வங்காளதேச வீரர் டவ்ஹித் ஹிரிடோயை வெளியேற்றியபோது  போல்ட் இந்த சாதனையைப் படைத்தார். மிடில் ஆர்டர் பேட்டரான ஹிரிடோயை முற்றிலுமாக ஏமாற்றி, 'நக்கிள் பால்' மூலம் மைல்கல் விக்கெட்டை வீழ்த்தினார் போல்ட். போட்டியின் முதல் பந்து வீச்சில் போல்ட் ஒரு விக்கெட் வீழ்த்தி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சினை மிகவும் வெற்றிகரமாக தொடங்கினார்.