உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. ஹாமில்டனில் நடைபெற்ற போட்டியில் 110 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், அரையிறுதி வாய்ப்பை பெறுவதற்கான போட்டியில் இந்திய அணி நீடிக்கிறது. சுழற்பந்து வீச்சாளர் சினேஹ் ராணா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர், 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 40.3 ஓவரில் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் சல்மா கதுன் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார்.
முன்னதாக, யாஸ்திகா பாட்டியா மற்றும் ஷபாலி வர்மா மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோரின் சிறப்பான இன்னிங்ஸால் 50 ஓவர்களில் 229 ரன்கள் எடுக்க முடிந்தது. ஷஃபாலி மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் தங்கள் வேலையை சிறப்பாகச் செய்யத் தொடங்கினார்கள். இருப்பினும், வங்காளதேச பவுலர்கள், ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா மற்றும் மிதாலி ராஜ் ஆகியோரின் மூன்று விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தி இந்தியாவை தடுமாற வைத்தனர். ஆனால் யாஸ்திகா பாட்டியா வலுவாக நின்று அரைசதம் அடித்தார். இறுதியில் இந்தியா மரியாதைக்குரிய ஸ்கோரை எட்ட உதவியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்