மகளிர் டி20 உலகக் கோப்பை 2024க்கு முன், தகுதிச் சுற்றுகள் மூலம் கடைசி இரண்டு இடங்களுக்கு 10 அணிகள் போட்டியிட இருக்கின்றன. இந்த தகுதி சுற்றுப் போட்டியானது வருகின்ற ஏப்ரல் 25ம் தேதி தொடங்கி, மே 7ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிக்காக அபுதாபியில் இரண்டு ஸ்டேடியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, டாலரன்ஸ் ஓவல் மற்றும் சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகியவை அடங்கும். இதில் தகுதிபெறும் இரண்டு அணிகளும் இந்த ஆண்டு இறுதியில் வங்கதேச மண்ணில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும்.
எந்தெந்த அணிகள் பங்கேற்பு..?
2024 மகளிர் டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும். இதில் முந்தைய போட்டியின் டாப்-6 அணிகள் அதாவது 2023 டி20 உலகக் கோப்பையில் முதல் 6 இடங்களை பிடித்த அணி தகுதி பெற்றது. இது தவிர, உலகக்கோப்பையை நடத்தும் வங்கதேசமும், ஐசிசி டி20 தரவரிசை அடிப்படையில் பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. கடந்த சீசனின் டாப்-6 அணிகளில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடம் பெற்றிருந்தன. இதன்மூலம் 8 அணிகள் இடம்பிடித்துள்ள நிலையில் 2 அணிகள் தகுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, இலங்கை, தாய்லாந்து, உகாண்டா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, வனுவாடு மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட மொத்தம் 10 அணிகள் தகுதிச் சுற்றில் பங்கேற்கிறது. இதில், இறுதிப்போட்டியில் விளையாடும் இரண்டு அணிகள் டி20 உலகக் கோப்பைக்கு தகுதிபெறும்.
எந்த அணி முதல் தகுதி சுற்றில் மோதுகிறது..?
தகுதிச் சுற்று முதல் போட்டியில் இலங்கை மற்றும் தாய்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. தகுதிச் சுற்றுக்கு விளையாடும் 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இலங்கை, தாய்லாந்து, ஸ்காட்லாந்து, உகாண்டா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இது தவிர, குரூப் பி - அயர்லாந்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வனுவாட்டு நாடுகள் இடம்பெற்றுள்ளன. இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் விளையாடும். அப்போது இறுதிப் போட்டிக்கு வரும் இரு அணிகளும் தகுதி பெறும்.
முழு அட்டவணை இதோ:
தேதி |
மோதும் அணிகள் |
போட்டி நடைபெறும் இடம் |
ஏப்ரல் 25 |
இலங்கை vs தாய்லாந்து |
டாலரன்ஸ் ஓவல் |
ஏப்ரல் 25 |
ஸ்காட்லாந்து vs உகாண்டா |
டாலரன்ஸ் ஓவல் |
ஏப்ரல் 25 |
அயர்லாந்து vs யுஏஇ |
சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம் |
ஏப்ரல் 25 |
ஜிம்பாப்வே vs வனுவாடு |
சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம் |
27 ஏப்ரல் |
வனுவாட்டு vs நெதர்லாந்து |
டாலரன்ஸ் ஓவல் |
27 ஏப்ரல் |
யுஏஇ vs ஜிம்பாப்வே |
டாலரன்ஸ் ஓவல் |
27 ஏப்ரல் |
உகாண்டா vs அமெரிக்கா |
சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம் |
27 ஏப்ரல் |
ஸ்காட்லாந்து vs இலங்கை |
சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம் |
29 ஏப்ரல் |
அமெரிக்கா vs ஸ்காட்லாந்து |
டாலரன்ஸ் ஓவல் |
29 ஏப்ரல் |
உகாண்டா vs தாய்லாந்து |
டாலரன்ஸ் ஓவல் |
29 ஏப்ரல் |
அயர்லாந்து vs ஜிம்பாப்வே |
சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம் |
29 ஏப்ரல் |
நெதர்லாந்து vs UAE |
சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம் |
மே 1 |
ஜிம்பாப்வே vs நெதர்லாந்து |
டாலரன்ஸ் ஓவல் |
மே 1 |
வனுவாட்டு vs அயர்லாந்து |
சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம் |
மே 1 |
இலங்கை vs உகாண்டா |
சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம் |
மே 1 |
தாய்லாந்து vs அமெரிக்கா |
சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம் |
மே 3 |
தாய்லாந்து vs ஸ்காட்லாந்து |
டாலரன்ஸ் ஓவல் |
மே 3 |
அமெரிக்கா vs இலங்கை |
சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம் |
மே 3 |
uae vs vanuatu |
சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம் |
மே 3 |
நெதர்லாந்து vs அயர்லாந்து |
சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம் |
மே 5 |
முதல் அரையிறுதி |
சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம் |
மே 5 |
இரண்டாவது அரையிறுதி |
சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம் |
மே 7 |
இறுதிப்போட்டி |
சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம் |