ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நெம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம். இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா ஒருநாள் போட்டியில் நான்காவது இடத்தில் உள்ளார். 


அண்மையில் ஐசிசி வெளியிட்டுள்ள விரர்களுக்கான தரவரிசையில் பட்டியலில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம் டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் முதல் இடத்தினை பெற்றுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டியில் மூன்றாவது இடத்திலும் உள்ளார். இவர் டி20 போட்டியில், பாபர் அஸாம் 818 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் 794 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஏய்டின் மார்க்கம் 757 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் சூர்ய குமார் யாதாவ் 732 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.






ஒருநாள் போட்டியினைப் பொறுத்தவரையில், பாபர் அஸாம் 892 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பாகிஸ்தான் வீரர் இமாம்-உல்-ஹக் 815 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ரஷிவண்டர் எனும் தென்னாப்பிரிக்க வீரர் 789 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அதேபோல் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில்  இந்திய வீரர்களில் கேப்டன் ரோகித ஷர்மா  நான்காவது இடத்திலும், விராட் கோலி ஐந்தாவது இடத்திலும் அடுத்தடுத்து உள்ளனர். 


டெஸ்ட் போட்டியினைப் பொறுத்தவரையில், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 923 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மார்னஸ் 885 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் 874 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். 


சர்வதேச டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபரில் தொடங்கவுள்ள நிலையில், ஐசிசி ஒவ்வொரு முறையும் வெளியிடும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியல் பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கி வருகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண