உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஆஸ்திரெலிய வீரர் டிராவிஸ் ஹெட், ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டாப் 3 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 7ம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் முதல் இரண்டு நாட்களில் டிராவிஸ் ஹெட் 174 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 163 ரன்களை குவித்தார். இதன் மூலம், ஐசிசி டெஸ்ட் ஆண்கள் தரவரிசை பட்டியலில் 884 ரேட்டிங்குடன் டாப் 3 இடங்களுக்கு முன்னேறினார். 

மார்னஸ் லாபுஷேன் 903 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் 885 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், டிராவிஸ் ஹெட் 884 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். டாப் மூன்று இடங்களில் உள்ளவர்கள் மூவரும் ஆஸ்திரேலிய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 1984 ம் ஆண்டுக்கு பிறகு ஒரே அணியை சேர்ந்த மூவர் டாப் 3ல் இருப்பது இதுவே முதல்முறை. கடந்த 1984 ம் ஆண்டு டிசம்பரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த கார்டன் கிரீனிட்ஜ் (810), கிளைவ் லாயிட் (787), மற்றும் லாரி கோம்ஸ் (773) ஆகியோர் டெஸ்ட் தரவரிசையில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அலெக்ஸ் கேரி 48 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். இதன்மூலம், 592 தரவரிசைப் புள்ளிகளுடன் 36வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணியை பொறுத்தவரை, ரிஷப் பண்ட் மட்டுமே 758 புள்ளிகளுடன் 10 வது இடத்தில் இருக்கிறார். இந்திய அணி கேப்டன்  ரோகித் சர்மா (729) மற்றும் விராட் கோலி (700) முறையே 12வது மற்றும் 13வது இடத்தில் உள்ளனர். இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போதிலும், ரஹானேவின் 89 மற்றும் 46 ரன்கள் அவர் தரவரிசை பட்டியலில் 37 வது இடத்திற்கு முன்னேற செய்துள்ளது. 

ஐசிசி ஆண்கள் டெஸ்ட் வீரர்கள் தரவரிசை (பேட்டிங்)

எண் பேட்ஸ்மேன்கள் அணி புள்ளி விவரங்கள்
1 மார்னஸ் லாபுசாக்னே ஆஸ்திரேலியா 903
2 ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா 885
3 டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியா 884
4 கேன் வில்லியம்சன் நியூசிலாந்து 883
5 பாபர் அசாம் பாகிஸ்தான் 862
6 ஜோ ரூட் இங்கிலாந்து 861
7 டேரில் மிட்செல் நியூசிலாந்து 792
8 திமுத் கருணாரத்ன இலங்கை 780
9 உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலியா 777
10 ரிஷப் பந்த் இந்தியா 758

பந்துவீச்சாளர்கள் தரவரிசை: 

பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் மூத்த ஆஃப் ஸ்பின்னர் அஷ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அதேபோல் டாப் 10 பட்டியலில் ரவீந்திர ஜடேஜா ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஜூலை 2022 இல் கடைசியாக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய காயமடைந்த ஜஸ்பிரித் பும்ரா, இரண்டு இடங்கள் சரிந்து எட்டாவது இடத்தில் இருக்கிறார். 

எண் பந்துவீச்சாளர்கள் அணி புள்ளிகள்
1 ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா 860
2 ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து 850
3 பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா 829
4 ககிசோ ரபாடா தென்னாப்பிரிக்கா 825
5 ஷஹீன் அப்ரிடி பாகிஸ்தான் 787
6 ஒல்லி ராபின்சன் இங்கிலாந்து 777
= நாதன் லியோன் ஆஸ்திரேலியா 777
8 ஜஸ்பிரித் பும்ரா இந்தியா 772
9 ரவீந்திர ஜடேஜா இந்தியா 765
10 ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து 744

ஆல்ரவுண்டர்கள் தரவரிசை:

எண் ஆல்ரவுண்டர்கள் அணி புள்ளிகள்
1 ரவீந்திர ஜடேஜா இந்தியா 434
2 ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா 352
3 ஷகிப் அல் ஹசன் வங்கதேசம் 339
4 அக்சர் படேல் இந்தியா 310
5 பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து 299
6 ஜேசன் ஹோல்டர் வெஸ்ட் இண்டீஸ் 283
7 கைல் மேயர்ஸ் வெஸ்ட் இண்டீஸ் 250
8 மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா 244
9 ஜோ ரூட் இங்கிலாந்து 235
10 பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா 208