Shami Replaces Bumrah : பும்ராவுக்கு பதில் களமிறங்கும் ஷமி..! இந்திய பந்துவீச்சு வலுவாகிறதா..?

Shami Replaces Bumrah : டி20 உலககோப்பை தொடரில் பும்ராவிற்கு பதிலாக முகமது ஷமி களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஆஸ்திரேலியாவில் நாளை மறுநாள் 8வது டி20 உலககோப்பைத் தொடர் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் இலங்கை – நமீபியா அணிகள் மோத உள்ளன. இந்திய அணி தனது முதல் போட்டியிலே பாகிஸ்தானுடன் வரும் 23-ந் தேதி மோத உள்ளது.

Continues below advertisement

இந்திய அணிக்கு பெரும் பலமாக கருதப்படும் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா காயத்தால் விலகியிருப்பது பெரும் பின்னடைவாக இருந்தது.

இதையடுத்து, அவருக்கு பதிலாக அணியில் இறங்கப் போவது யார்? என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அவருக்கு பதிலாக முகமது ஷமி களமிறங்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ 15 பேர் கொண்ட அணியில் முதன்மை வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமி பெயர் இடம்பெற்றுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola