நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 111 ரன்களில் ஆட்டமிழந்து படுதோல்வி அடைந்துள்ளது.


தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டேவிட் வார்னர் (5 ரன்கள்), கேப்டன் ஆரோன் ஃபின்ச் (13 ரன்கள்) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் நிதானமாக விளையாடினர். எனினும், நியூசிலாந்து பந்துவீச்சாளர் சவுதீ வீசிய பந்தில் நீஷமிடம் கேட்ச் ஆனார் மார்ஷ். அப்போது அவர் 16 ரன்கள் எடுத்திருந்தார்.


மார்கஸ் ஸ்டாய்னிஸ் மேக்ஸ்வெல்லுக்கு அருமையான கூட்டணி கொடுத்தார். எனினும் இந்தக் கூட்டணியையும் நியூசிலாந்து உடைத்தது. சான்ட்னர் வீசிய பந்தில் கிளென் மேக்ஸ்வேல் கேட்ச் கொடுத்து 7 ரன்களில் நடையைக் கட்டினார் மார்கஸ் ஸ்டாய்னிஸ்.


T20 Worldcup Cricket: முதல் சுற்று ஆட்டத்தில் அதிக ரன்களை விளாசிய இளம் வீரர்கள் யார்..? யார்..? தெரியுமா..?


அப்போது அணி 8.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 50 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதையடுத்து டிம் டேவிட் (11 ரன்கள்), விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் (2 ரன்கள்),  பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (4 ரன்கள்), ஆடம் ஜம்பா (0 ரன்கள்) ஆகியோர் நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் சான்ட்னர் 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சுருட்டினார்.


Accident : கிரிக்கெட் வீராங்கனைகள் சென்ற பேருந்து விபத்து..! அச்சச்சோ.. என்னாச்சு..?


டிரென்ட் போல்ட் 4 ஓவர்களில் 23 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், லாக்கி ஃபெர்குசன்1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இஷ் சோதி 1 விக்கெட்டை வீழ்த்தினார். டிம் சவுதீ 2.1 ஓவர்கள் வீசி 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.