உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி முடிந்தது. பாகிஸ்தானை இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.


இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் தங்களது இரண்டாவது கோப்பையை வெல்ல இன்று பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்னில் தொடங்கிய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 


இதையடுத்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்   8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்தது. 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடியது. 19 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.


வாழ்த்து மழையில் நனையும் இங்கிலாந்து


இங்கிலாந்து அணி வாழ்த்து மழையில் நனைந்து வருகிறது.  இங்கிலாந்து அணியின் முக்கியமான பந்துவீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் காயம் காரணமாக அணிக்காக விளையாடாமல் இருந்து வருகிறார்.


இவர் ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "அருமையாக விளையாடினீர்கள். பைனல் அருமையாக இருந்தது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். பாகிஸ்தானும் அருமையாக விளையாடியது" என்று குறிப்பிட்டுள்ளார்.






இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லருக்கு வாழ்த்துகள். அவருடைய அணிக்கும் வாழ்த்துகள். அடில் ரஷீத், சா்ம கர்ரன் ஆகிய வீரர்கள் மிக அருமையாக விளையாடினீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் உடைந்த இதயம் எமோஜியை ட்விட்டரில் பகிர்ந்தார்.


அவருக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, "மன்னிக்கவும் பிரதர். இதை கர்மா என்று அழைப்பார்கள்" என்று பதலளித்தார்.






இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மண் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "80ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களுடன் மெல்போர்ன் மைதானத்தில் பைனல் நடந்தது. பாகிஸ்தானும் சவால் அளித்தது. வெற்றி பெற்ற இங்கிலாந்துக்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.






இந்திய அணியின் மற்றொரு முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் வாழ்த்துச் செய்தி வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,


 





"இங்கிலாந்துக்கு வாழ்த்துகள். பாகிஸ்தானுக்கு எதிரான மகத்தான வெற்றி பெற்றுள்ளீர்கள். இரு அணிகளுக்கு மிகச் சிறந்த முயற்சிகளை எடுத்தது. பென் ஸ்டோக்ஸ் மிகச் சிறப்பாக ஆடினீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.