டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் முதல் சூப்பர் 12 போட்டியில் ஸ்காட்லாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கப்டில் மற்றும் மிட்செல் முதல் ஓவரில் 13 ரன்கள் விளாசினர்.
நடப்பு டி20 உலகக் கோப்பையில் முதல் ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பாக இங்கிலாந்து-இலங்கை போட்டியின் முதல் ஓவரில் இங்கிலாந்து அணி 12 ரன்கள் அடித்திருந்தது. தற்போது அதை நியூசிலாந்து அணி 13 ரன்கள் அடித்து தாண்டியது. அதன்பின்னரும் மார்டின் கப்டில் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். மறுமுனையில் மிட்செல் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழ்ந்தார்.
இறுதியில் மார்டின் கப்டிலின் அதிரடி மற்றும் கிளன் பிலிப்ஸின் நிதான ஆட்டம் நியூசிலாந்து அணிக்கு கை கொடுத்தது. சிறப்பாக ஆடிய கப்டில் 7 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளின் உதவியுடன் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
இந்தப் போட்டியில் ஸ்காட்லாந்து அணியின் பந்துவீச்சின் போது அந்த அணியின் விக்கெட் கீப்பர் மேட் க்ராஸ் பந்துவீச்சாளரை உற்சாகப்படுத்தினார். அப்போது அவர், ‘கமான் கிரீவ்ஸ் ஒட்டு மொத்த இந்தியாவே நம்ம பக்கம் உள்ளது’ என்று கூறினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. அது தற்போது வேகமாக பரவிவருகிறது. இந்த வீடியோ குறித்து பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து அணி 173 என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. சற்று முன்பு வரை அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்துள்ளது. அப்போது ஆட்டத்தின் 6ஆவது ஓவரை ஆடெம் மில்னே வீசினார். அதில் 5 பவுண்டரிகள் விளாசி மேட் க்ராஸ் அசத்தினார். விக்கெட் கீப்பிங்கின் இந்தியாவே நம்ம பக்கம் என்று கூறியது. அதன்பின்னர் 5 பவுண்டரிகள் அடித்ததன் மூலம் ஸ்காட்லாந்து வீரர் மேட் க்ராஸ் இந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார்.
மேலும் படிக்க:டி20 பவர்பிளேவில் தொடர்ந்து சொதப்பும் இந்திய பந்து வீச்சாளர்கள்- தரவுகள் கூறுவது என்ன?