டி-20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகளில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும் இறுதி போட்டிக்குள் தகுதி பெற்றது. இந்நிலையில், இன்று துபாயில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டி தொடங்கியது. 


இந்நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பு டி-20 உலகக்கோப்பை போட்டிகளின் வெற்றி, தோல்வியில் டாஸ் மிக முக்கியமான பங்காற்றுவதால், இன்றைய போட்டியில் டாஸ் ஜெயிக்கப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிமாக இருந்தது. டாஸ் ஜெயித்த அணி போட்டியை வெல்ல அதிக வாய்ப்புகள் என கணிப்புகள் தெரிவித்து வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்ய இருக்கும் நியூசிலாந்து அதிக இலக்கை செட் செய்து டிஃபெண்ட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இறங்கியது.


முதலில் பேட்டிங் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, மார்டின் குப்தில், டேரில் மிட்சல் ஓப்பனிங் இறங்கினர். ஆனால், அரை இறுதிப்போட்டியில் நாயகனாக மின்னிய மிட்சல் இன்று ஹேசல்வுட்டின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் 11 ரன்கள் மட்டுமே எடுத்து முதல் ஆளாய் அவுட்டாகி வெளியேறினார். இதனால், 4வது ஓவரிலேயே கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் களமிறங்க நேரிட்டது. மற்றொரு ஓப்பனரான குப்தில் (28) பெரிதாக சோபிக்காத நிலையில், வில்லியம்சன் மட்டும் சிறப்பாக ஆடினார். 3 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் என 48 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து கேப்டன் பொறுப்பை கச்சிதமாக நிறைவேற்றினார் வில்லியம்சன். 






ஆஸ்திரேலியாவைப் பொருத்தவரை, ஜம்பா ஒரு விக்கெட்டும், ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். குறிப்பாக, 18வது ஓவரின்போது க்ளென் ஃபிலிப்ஸ், வில்லியம்சன் என அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் சரிந்தன. இதனால், 20 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து அணி. ஆஸி., கோப்பையை கைப்பற்ற 173 ரன்கள் தேவை.


ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் 5 முறை கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி, இந்த முறை கோப்பையை கட்டாயம் வென்றாக வேண்டும் என்று களமிறங்கும். அதேபோல், 2019 ஒருநாள் உலகக்கோப்பை இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி கோப்பையை தவறவிட்டது. இதனால் இந்தமுறை கட்டாயம் கோப்பை வெல்ல நியூசிலாந்து அணி தீவிரமாக முயற்சிக்கும். கடந்த 2015 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி கோப்பையை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண