டி-20 உலக்கோப்பை தொடரின் அரை இறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றது. நேற்று நடந்த முதல் அரை இறுதிப்போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது நியூசிலாந்து. இந்நிலையில், இன்று துபாயில் நடந்த இரண்டாது அரை இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் களமிறங்கிய பாகிஸ்தான் 176 ரன்கள் எடுக்க, 177 ரன்களை சேஸ் செய்து ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே ஷாயின் அஃப்ரிதி வீசிய பந்தில் ஃபின்ச் டக்-அவுட்டாகி வெளியேறினார். அதனை தொடர்ந்து 7,9,11,13 என ஓவர்களில் விக்கெட்டுகள் சரிந்தன. ஓப்பனர் வார்னர் நிதானமாக தொடங்கி 49 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்ற பேட்டர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், ஸ்டாய்னிஸ் (40*) கடைசி வரை களத்தில் நின்றார். இவரோடு கூட்டணி சேர்ந்த வாடே, போட்டியின் முக்கியமான கட்டத்தில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என வெறும் 17 பந்துகளில் 41* ரன்கள் எடுத்து அவரும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது ஆஸ்திரேலியா.


கடந்த 50 ஓவர் உலகக்கோப்பை போன்றே இதுவரை டி-20 உலகக்கோப்பையை வெல்லாத ஓர் புதிய அணி இம்முறை சாம்பியன் ஆக உள்ளது. நவம்பர் 14-ம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியை சந்திக்க உள்ளது.


முதல் இன்னிங்ஸ் ரீவைண்ட்:


பேட்டிங் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு வழக்கம் போல பாபர் அசாமும், ரிஸ்வானும் முதல் பேட்டிங் ஆடினர். 10 ஓவர்கள் வரை களத்தில் நின்ற இந்த இணை 70+ ரன்கள் சேர்த்தது. 10வது ஓவரின்போது ஜம்பா வீசிய பந்தில்தான் கேட்ச் கொடுத்து பாபர் அசாம் அவுட்டாகினார். அவரை அடுத்து ஃபகர் ஜமான் களமிறங்கினார். மீண்டும் ஜோடி சேர்ந்து ஆடியது ரிஸ்வான் - ஜமான் இணை. 18 ஓவர்கள் வரை இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இந்த இணை அணியின் ஸ்கோரை 140+க்கு எடுத்துச் சென்றனர். 









4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என 52 பந்துகளில் 67 ரன்கள் எடுத்திருந்தபோது ரிஸ்வான் அவுட்டாகினார்.அவரை அடுத்து களமிறங்கிய ஆசிஃப் அலி (0), சோயப் மாலிக்கும் (1) அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. ஆஸ்திரேலியாவை பொருத்தவரை ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளும், கம்மின்ஸ், ஜம்பா தலா 1 விக்கெட் எடுத்தனர். இதனால், 20 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் 176 ரன்கள் எடுத்துள்ளது. 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண