இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் ஆகியோருக்கு இரண்டு குழந்தைகள் ஆகும். மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தனது அப்பாவை போல் கிரிக்கெட் வாழ்க்கையை கையில் எடுத்து இந்திய அணிக்குள் வர முயற்சி மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் இவர் ஐபிஎல் 2023ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமாகி விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மகள் சாரா டெண்டுல்கர் தனது சிறு வயது முதலே மிகவும் பிரபலம். தற்போது ஒரு ஃபேஷன் ஐகானாக மாறி அவ்வபோது போட்டோஷூட்டில் ஈடுபட்டு வருகிறார். 


சாரா டெண்டுல்கர் 1997ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி மும்பையில் பிறந்தார். தனது தாய் அஞ்சலியின் அழகும் நேர்த்தியும் சாராவிடம் இருந்து வந்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய போது "சஹாரா கோப்பை” வென்றதால் அவரது மகளுக்கு சாரா என பெயர் சூட்டியதாக கூறப்படுகிறது.


இந்தநிலையில், பல ஆண்டுகளாக இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில்லும், சாரா டெண்டுல்கரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதை ஒரு தரப்பினர் பொய் என்றும், மற்றொரு தரப்பினர் உண்மை என்றும் கூறி வருகின்றனர். தற்போது, இதை நிரூபிக்கும் விதமாக சாரா டெண்டுல்கர் பதிவிட்ட எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.






உலகக் கோப்பை 2023ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில், இன்று ஒருநாள் ஐசிசி தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறினார். இதன்மூலம், ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த 4வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். இதையடுத்து, முதலிடம் பிடித்த சுப்மன் கில்லுக்கு பலரும் சோசியல் மீடியாக்களில் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். அந்தவகையில், சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா டெண்டுல்கர் தனது எக்ஸ் பதிவில், “உலகின் நம்பர் 1 ODI பேட்ஸ்மேன் @ShubmanGill ❤️😘” என முத்தம் கொடுப்பது போன்ற எமோஜியை பதிவிட்டுள்ளார்.  இதனால் இவர்கள் இருவரும் உண்மையாகவே காதலிக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. 






மேலும், கடந்த நவம்பர் 1ம் தேதி மும்பையின் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் உள்ள ஜியோ வேர்ல்ட் பிளாசாவிற்கு வெளியே சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் ஒன்றாக காணப்பட்டனர். இருப்பினும், இதுவரை இருவரும் தங்கள் உறவு நிலையை பகிரங்கப்படுத்தவில்லை. அதாவது, இவர்கள் இருவரும் காதல் பறவைகளா அல்லது இரண்டு நல்ல நண்பர்களா என்பது இதுவரை தெரியவில்லை. முன்னதாக, உலகக் கோப்பை போட்டியின் போது சாரா டெண்டுல்கர் சமீபத்தில் சுப்மன் கில் சத்தை மிஸ் செய்தபோது, நேரில் மேட்சை பார்த்து ஃபீல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.