விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகிறது. 


 இதுவரையில் நெதர்லாந்து அணிக்காக விளையாடிய வீரர்களில் 9 பேர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர்கள். அதில் தற்போது விளையாடும் நெதர்லாந்து அணியில் மூன்று வீரர்கள் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.


ரோலோஃப் வான் டெர் மெர்வே:


38 வயதாகும் ரோலோஃப் வான் டெர் மெர்வே நெதர்லாந்து அணியின் அனுபவமிக்க வீரர்களில் ஒருவர். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 1984 பிறந்தவர். 


தென்னாப்பிரிக்க அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள இவர், பல டி20 போட்டிகளிலும் அந்த அணிக்காக விளையாடி உள்ளார்.



அதன்பின்னர், தென்னாப்பிரிக்க அணியில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் தன்னுடைய குடியுரிமையை நெதர்லாந்துக்கு மாற்றினார்.  இதன்மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டில் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் டி20 மூலம் நெதர்லாந்து அணிக்காக அறிமுகமானார்.


ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கு தங்களது அணி தகுதி பெற வான் டெர் மெர்வே முக்கிய பங்கு வகித்தவர் என்பது கவனிக்கத்தக்கது.


கொலின் அக்கர்மேன்


டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களில் நெதர்லாந்து அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவர் கொலின் அக்கர்மேன். நெதர்லாந்து அணிக்காக விளையாடி வந்தாலும் இவரும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர்தான்.


1991 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் கேப் மாகாணத்தில் உள்ள ஜார்ஜ் நகரில் பிறந்தவர். இவர் தென்னாப்பிரிக்காவின் அண்டர் 19 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க அண்டர் 19 அணியின் துணை கேப்டனாகவும் இருந்தவர். இருந்தாலும் இவருக்கு அந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. அதனால் நெதர்லாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.


ரியான் க்ளீன்


வலது கை வேகப்பந்து வீச்சாளர் ரியான் க்ளீனும் தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் டவுனில் 1997 இல் பிறந்தவர்தான். தற்போது நெதர்லாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.  கடந்த ஆண்டுதான் இவர் நெதர்லாந்து அணிக்காக அறிமுகமானார்.


13 ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடியுள்ளார்.


முன்னதாக இந்த உலகக் கோப்பையில்  இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த நெதர்லாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடி வருகிறது.


மேலும் படிக்க: Gurbaz: சதம் அடிக்காத விரக்தி! பேட்டால் நாற்காலியை தாக்கிய குர்பாஸ்... ஐசிசி எடுத்த அதிரடி நடவடிக்கை..!


 


மேலும் படிக்க: World Cup 2023: உலகக் கோப்பையில் சோதனை மேல் சோதனை... இலங்கை அணி படைத்த மோசமான சாதனை!