ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒருநாள் தரவரிசை பட்டியலில் நேற்று மீண்டும் முதல் இடத்தை பிடித்து அசத்தியது. ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் பாகிஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 123 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தது.
ஒருநாள் தரவரிசை:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது 121 தரவரிசைகளுடன் முதலிடத்தை எட்டியுள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் அணி 120 ரேட்டிங்குடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா 114 ரேட்டிங்குடன் மூன்றாவது இடத்திலும், நியூசிலாந்து 106 ரேட்டிங்குடன் நான்காவது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து, இங்கிலாந்து அணி 99 ரேட்டிங்குடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
ஐசிசி அணி தரவரிசை (ஆண்களுக்கான ஒருநாள் போட்டி நிலை)
தரவரிசை | அணி | போட்டிகள் | புள்ளிகள் | மதிப்பீடு |
---|---|---|---|---|
1 | ஆஸ்திரேலியா | 25 | 3,014 | 121 |
2 | பாகிஸ்தான் | 25 | 2,997 | 120 |
3 | இந்தியா | 37 | 4,204 | 114 |
4 | நியூசிலாந்து | 28 | 2,957 | 106 |
5 | இங்கிலாந்து | 25 | 2,480 | 99 |
6 | தென்னாப்பிரிக்கா | 21 | 2,047 | 97 |
7 | வங்கதேஷம் | 32 | 2,941 | 92 |
8 | இலங்கை | 35 | 3,215 | 92 |
9 | ஆப்கானிஸ்தான் | 21 | 1,687 | 80 |
10 | வெஸ்ட் இண்டீஸ் | 38 | 2,582 | 68 |
11 | ஜிம்பாப்வே | 30 | 1,641 | 55 |
12 | ஸ்காட்லாந்து | 33 | 1,662 | 50 |
13 | அயர்லாந்து | 24 | 1,052 | 44 |
14 | நெதர்லாந்து | 28 | 1,044 | 37 |
15 | நேபாளம் | 42 | 1,446 | 34 |
16 | நமீபியா | 28 | 813 | 29 |
17 | அமெரிக்கா | 31 | 808 | 26 |
18 | ஓமன் | 24 | 525 | 22 |
19 | ஐக்கிய அரபு எமிரேட்ஸ் | 41 | 617 | 15 |
உலக சாதனை படைத்த ஆஸ்திரேலிய அணி:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் 10 ஓவர்களில் அணியின் ஸ்கோரை 100 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றனர். இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியதில்லை. ஆனால் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி சரித்திரம் படைத்தது. இதன் மூலம் ஆப்பிரிக்காவில் முதல் 10 ஓவர்களில் 100 ரன்களுக்கு மேல் எடுத்த உலகின் முதல் அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது.
ஆஸ்திரேலியா 392 ரன்கள் எடுத்து 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி:
இரண்டாவது ஒருநாள் போட்டியில் டேவிட் வார்னர் 106, மார்னஸ் லாபுசாக்னே 124 ரன்கள் அடித்ததன் மூலம் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 392 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த தென்னாபிரிக்காஅணி 41.5 ஓவர்களில் 269 ரன்களை மாத்திரமே எடுக்க முடிந்தது. தென்னாபிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டி காக் 45 ரன்களையும், பவுமா 46 ரன்களையும், ஹென்ரிச் கிளாசன் 49 ரன்களையும், டேவிட் மில்லர் 49 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.