உலகக் கோப்பை 2023ல் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 275 ரன்களுக்கு மேல் இலக்கை கொடுத்து 48 ஆண்டுகால ஒருநாள் உலக வரலாற்றில் பாகிஸ்தான் அணியும் முதல்முறையாக தோல்வியடைந்துள்ளது. எத்தனை ஆண்டுகால வரலாற்றை எடுத்து பார்த்தாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பந்துவீச்சு எப்போதுமே மிகச் சிறப்பாகவே இருந்து வருகிறது. வாசிம் அக்ரம், யூனிஸ் கான், இம்ரான் கான் மற்றும் அக்தர் என்ற வேகப்பந்து வீச்சாளர்களால் வேகத்திற்கு பெயர்போன அணியாக பாகிஸ்தான் அணி இருந்தது. இதன் காரணமாக, உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி எதிரணிக்கு 275 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை இலக்காகக் கொடுத்த போதெல்லாம், அந்த போட்டியில் பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது.


ஆனால், இம்முறை அது நடக்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்த இலக்கை 49 ஓவர்களில் கடந்து ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. எனவே, 275 ரன்களுக்கு மேல் இலக்கை கொடுத்தும் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது இதுவே முதல் முறை.


உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் மூன்றாவது வெற்றி:


இந்த முறை ஒருநாள் உலகக் கோப்பை ஆப்கானிஸ்தான் அணிக்கு வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்தது. இந்த உலகக் கோப்பைக்கு முன், ஆப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. 2015 உலகக் கோப்பையில் ஒரேயொரு போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அதன்பிறகு, இந்த உலகக் கோப்பையில், முதலில் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்தையும், அடுத்து பாகிஸ்தானையும் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி மூன்றாவது உலகக் கோப்பை போட்டிகளை வென்றுள்ளது.


உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தனது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. லீட்ஸில் நடந்த உலகக் கோப்பை 2019 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அவர்கள் எடுத்த 288 ரன்களே ODI உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதன்பிறகு, ஆப்கானிஸ்தான் அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் நேற்றிரவு பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த 286 ரன்கள் ஆகும். 


ஒருநாள் வடிவத்தில் மிகப்பெரிய வெற்றிகரமான சேஸ்:


பாகிஸ்தானுக்கு எதிரான 283 ரன்கள் இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி இலக்கை துரத்தியது. இதற்கு முன் ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய வெற்றிகரமான ரன் சேஸ் 2014ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக இருந்தது.


ஆப்கானிஸ்தானின் இந்த வெற்றி ஒவ்வொரு வகையிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த வெற்றிக்கு பிறகு, ஸ்டேடியத்தில் இருந்து ஹோட்டலுக்குச் செல்லும் போது பேருந்தில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் நடனமாடிக்கொண்டிருந்தனர். அதன் வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதற்கு முன், ஆப்கானிஸ்தான் வீரர்களும் இந்த வெற்றியை டிரஸ்ஸிங் ரூமில் கொண்டாடினர், இது தொடர்பான வீடியோவும் வைரலானது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும். இதற்கு முன் பல சமயங்களில் இரு அணிகளுக்கும் இடையே நெருக்கமான போட்டிகள் நடந்தாலும், ஒவ்வொரு முறையும் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.